உலகம்

காணாமல் போன வளர்ப்பு பிராணிகளை கண்டுபிடிக்கும் சீனாவின் ‘பெட் டிடெக்டிவ்’

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காணாமல் போன வளர்ப்பு பிராணிகளை கண்டுபிடிக்கும் சீனாவின் ‘பெட் டிடெக்டிவ்’

நம்மூரில் எல்லாம் நாம் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகள் தொலைந்துவிட்டால் போஸ்டர் அடித்து சன்மானம் வழங்குவதாக தெரிவிப்பார்கள். இதனை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் சீனாவில் காணாமல் போன செல்லப்பிராணிகளை ‘பெட் டிடெக்டிவ்’ என்றழைக்கப்படும் மனிதர்கள் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள்.

அதில் ஒருவர் தான் சீனாவைச் சேர்ந்த சன் ஜின்ராங் என்னும் பெட் டிடெக்டிவ் . இவர்தான் சீனாவின் முதல் பெட் டிடெக்டிவ் என கவுரவிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வளர்ப்புப் பிராணிகள் உரியவர்களிடம் கண்டறிந்து வழங்கியுள்ளாராம்.

ALSO READ  Corona வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை… கண்ணீர்விட்ட மருத்துவர்

கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியைச் செய்து வரும் சன் ஜின்ராங், ஒரு தேடுதல் பணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை பெறுகிறார்.

இதற்காகவே பல அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளை அவர் பயன்படுத்துகிறார். இவர் இதுவரையில் வழங்கப்பட்ட பணிகளில் சுமார் 70 %தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்லப் பிராணிகளைக் கண்டறிந்து கொடுத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகில் 8 கோடியை நெருங்கியது கொரோனா தொற்று ..!

News Editor

சிங்கத்திடம் சிக்கிய சிறுவன்: சாதுரியமாக மீட்ட தந்தை

Admin

பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு மூவர்ணக் கொடியுடன் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்… 

naveen santhakumar