உலகம் விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை

ஊக்கமருந்து சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை டபிள்யு.ஏ.டி.ஏவிடம் சமர்ப்பிக்க தவறிய காரணத்தால் ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உலக ஊக்கமருத்து எதிர்ப்பு ஏஜென்சியின் (டபிள்யு.ஏ.டி.ஏ) சிறப்புக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊக்கமருத்து சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை டபிள்யு.ஏ.டி.ஏவிடம் சமர்ப்பிக்க தவறிய காரணத்தால் சர்வதேச அளவிலான ஒலிம்பிக், உலகக்கோப்பை போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ALSO READ  இவாங்கா டிரம்ப்புக்கு கொரானாவா?? வெள்ளை மாளிகை விளக்கம்...
A man walks in front of the Russian Olympic Committee (ROC) headquarters in Moscow on December 6, 2019. – The executive committee of the World Anti-Doping Agency will meet in Lausanne on December 9 to consider a recommendation for the ban, which would exclude Russians from major sports events including the 2020 Tokyo Olympics and 2022 Beijing Winter Olympics. A WADA review panel has accused Moscow of falsifying laboratory data handed over to investigators as part of a probe into the doping allegations that have plagued Russia for years. (Photo by Alexander NEMENOV / AFP) (Photo by ALEXANDER NEMENOV/AFP via Getty Images)

இந்த தடையால் ரஷ்யாவால் வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 பீஜிங் விண்டர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், 2022 உலகக்கோப்பை கால்பந்து போன்ற மிகப்பெரிய போட்டிகளில் பங்கேற்க முடியாது. மேலும் போட்டி தொடர்களின் போது ரஷ்ய கொடியை பயன்படுத்தவோ அல்லது ரஷ்யாவின் தேசிய கீதம் இசைக்கவும் அனுமதியில்லை.

ஆனால் ஊக்கமருந்து பின்னணியில் சிக்காத ரஷ்ய வீரர், வீராங்கனைகள் தனிக்கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்கலாம். ஏற்கனவே கடந்த 2014ல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதுகுறித்து டபிள்யு.ஏ.டி.ஏ தலைவர் கிரேக் ரீடி கூறுகையில், கடந்த 2015 முதலே இந்த விவகாரத்தில் ரஷ்யா நேர்மையான செயல்பட தவறியதால் இந்த தடை முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரும்பிலே ஒரு இருதயம் : ராணுவ வீரரின் வித்தியாசமான லவ் ப்ரபோஸல்

naveen santhakumar

மே 29 இல் “கொரோனா” முடிவுக்கு வரும் ! 8 மாதத்திற்கு முன்பே கணித்த “சிறுவன்” !!!!

naveen santhakumar

கோல்டன் குளோப் விருதுகள் 2020

Admin