உலகம்

மீம்களில் சவப்பெட்டிகளை தூக்கிக் கொண்டு ஆடும் இவர்கள் உண்மையில் யார் ???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமீப காலமாக அதிகம் பகிரப்பட்ட மீம்கள் மற்றும் வீடீயோக்களின் இறுதியில் சில நபர்கள் இணைந்து சவப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஆடும் வீடியோ ஒன்று  வைரலாகி வருகிறது. 

முதலில் இது ஏதோ திரைப்படம் அல்லது காமெடி ஆல்பம் என மக்கள் நினைத்தனர். ஆனால் அந்த வீடியோவில் வருபவர்கள் உண்மையாகவே சவப்பெட்டி நடனக்காரர்கள் தான்.

ஒருவரின் இறுதிசடங்கின் போது நம்மூர்களில்  உடலின் முன்னால் நடனமாடி செல்வது வழக்கம். அதை போன்று உலகம் முழுவதும் நடனமாட குழுக்கள் உள்ளன. 

இவர்கள் பால்பியரர்கள் (Pallbearer) என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் சவப்பெட்டி ஏதும் சேதம் ஆகி விடக்கூடாது என்பதற்காக கையில் வெள்ளை நிற கையுறைகளை (Gloves) அணிந்து கொள்வார்கள். இந்தப் பால்பியரர்கள் சவப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடனமாடியும் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களை இறுதிச் சடங்கின்போது செய்தும் இறந்த மனிதனுக்கு மரியாதை செலுத்துவார்கள்.

அப்படி கானா நாட்டை சேர்ந்த ஒரு குழுவின் வீடியோ தான் இது. கானா நாட்டிலுள்ள பெஞ்சமின் ஐடோ (Benjamin Aidoo) என்பவற்றின் தலைமையில் இயங்கும் இந்த நடனக்குழு, ஒன்று இறுதிச்சடங்கில் சவப்பெட்டியை தூக்கிக் கொண்டு நடனமாடவும் இயங்குகிறது.

ALSO READ  சீன நாட்டவர்களுக்கு ஹோட்டலில் உணவு கிடையாதா ?
Benjamin Aidoo.

இந்த நடனக்குழு ஆரம்பித்த சில நாட்களிலேயே கானா நாடு முழுவதும் பிரபலாமானது. பலர் தங்களது வீட்டில் மரணம் நிகழ்ந்தால் இறுதி சடங்கிற்கு பெஞ்சமின் குழுவை அழைக்கின்றனர். அதோடு மட்டுமல்லாது, கானாவில் வேலையில்லா திண்டாட்டம் இருந்த போது நூறு  இளைஞர்களுக்கு இந்த குழுவின் மூலம் வேலையளித்துள்ளார் பெஞ்சமின் ஐடோ. தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த வலியிலிருந்து அவர்களை மீது கொண்டு வருவதே எங்களின் நோக்கம் என்கிறது அந்த குழு.

ALSO READ  பிரதமர் மோடியிடம், அமெரிக்கா ஒப்படைத்த 157 கலைப்பொருட்கள்..!!
courtesy.

இந்த சவப்பெட்டி நடனம் யூ-டியூபில் மிகவும் பிரபலம் என்றாலும், தற்போது மீம்ஸ்கள் மூலம் அதிகம் பிரபலமாகி வருகிறது. பல நாடுகள் இந்த மீம்ஸ்களை பயன்படுத்தி மக்கள் வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய Hyundai Aura

Admin

ஜப்பானில் தனிமையை போக்க தனி அமைச்சர் நியமனம் !

News Editor

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம்

News Editor