உலகம்

7 கோடி ரூபாய் மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மனைவிக்கு பரிசாக அளித்த கணவர்… காரணம் என்ன..????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாங்கூவர்:-

நமது மனதுக்கு நெருக்கமானவர்கள் நமக்கு அளிக்கும் பரிசு எதுவானாலும், மிகுந்த மகிழ்ச்சியை நமக்கு கொடுக்கும். அதுவே விலை உயர்ந்த பரிசுகள் என்றால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படி ஒரு மகிழ்ச்சி தற்போது ஏனி பிலிப்பிற்கு (Anie Phillip) கிடைத்துள்ளது. ஏனி பிலிப்பின் கணவர், அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார் ஒன்றை தற்போது பரிசாக வழங்கியுள்ளார்.

ஏனி பிலிப்பும், அவரது கணவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்தியர்கள் ஆவர். அவர்கள் தற்போது கனடாவின் வான்கூவர் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களது 25ஆவது திருமண நாளை ஒட்டி கணவரிடம் இருந்து ஏனி பிலிப்பிற்கு பரிசாக கிடைத்திருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் ஆகும். இது சூப்பர் லக்ஸரி எஸ்யூவி ரகத்தை (Super Luxury SUV) சேர்ந்த மிக விலை உயர்ந்த கார். 

ALSO READ  பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரி்க்கா பயணம்...!!

இதன் மூலமாக வட அமெரிக்க கண்டத்தில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை சொந்தமாக்கிய முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

ஏனி பிலிப்பும், அவரது கணவரும் கடந்த மார்ச் 30ம் தேதி தங்களது 25வது திருமண நாளை கொண்டாடினர். அன்றைய தினம்தான் இந்த தம்பதியருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஏனி பிலிப்பும், அவரது கணவரும் கார்களை அதிகம் நேசிக்க கூடியவர்கள். 

ஏனி பிலிப்பும், அவரது கணவரும் சொந்தமாக்கும் முதல் சொகுசு கார் இது கிடையாது. ஆனால் இதுதான் அவர்களின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார். இந்தியாவிலும், கனடாவிலும் அவர்களிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருக்கின்றன. ஏனி பிலிப் குடும்பத்தினரிடம் லக்ஸரி பேக்கேஜ் உடன் 2005 ஹம்மர் எச்2 கார் தற்போது இருக்கிறது.

மேலும் 2016 போர்ஷே கேயென் மற்றும் 2019 லெக்ஸஸ் என்எக்ஸ் (எஃப்-ஸ்போர்ட் பேக்கேஜ்) ஆகிய கார்களும் உள்ளன. தற்போது அவர்களது குடும்பத்தினரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரும் இணைந்திருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் அவர்களிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்350 எஸ்யூவி கார் இருக்கிறது. இந்தியா வரும்போதெல்லாம் அந்த காரை அவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்.

ALSO READ  பார்சலில் வந்த ஒமைரான்… மக்கள் அதிர்ச்சி!

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 560 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்திய ரூபாய் மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 6.95 கோடி ரூபாய்.

இதேபோல கடந்த மார்ச் எட்டாம் தேதி உலக பெண்கள் தினத்தன்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தனது மனைவிக்கு லம்போகினி கார் ஒன்றை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கடவுளின் இருப்பு தேற்றத்தை வெளியிட்ட கணிதவியலாளரின் பிறந்தநாள் இன்று…

naveen santhakumar

குளியலறையில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபருக்கு நேர்ந்த கதி

Admin

போராட்டம் நடத்தியவர்கள் மீது பாய்ந்த கார்….6 பேர் படுகாயம்….

naveen santhakumar