உலகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி :

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.

India Urges Its Nationals To Leave Afghanistan On "Special Flight" Today || ஆப்கானிஸ்தானில்  இருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆப்கானிஸ்தானின் 4-வது பெரிய நகரமான மசார் இ ஷரிப் நகரை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  பிரபல ஆப்பிள் நாளிதழ் மூடப்பட்டது
US urges citizens to immediately leave Afghanistan as Taliban intensifies  attack | World News - Hindustan Times

இதையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள 4-வது பெரிய நகரமான மசார்-இ-ஷெரீப்பிலிருந்து கிளம்பும் சிறப்பு விமானம் மூலம் அங்கிருந்து வெளியேற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம்…!

Shobika

பாஸ்போர்ட்டை கடித்து குதறிய நாய்க்கு நன்றி தெரிவித்த பெண் !

Admin

காபூலில் பாதுகாப்பு அமைச்சர் வீட்டு முன்பு தாக்குதல் – 4 பேர் பலி

Shobika