உலகம்

2050 ஆம் ஆண்டிற்குள் விவசாயத்திற்குரிய மேல்மட்ட மண் சுரண்டப்படும் அபாயம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2050 ஆம் ஆண்டிற்குள் விவசாயத்திற்குரிய மேல்மட்ட மண் சுரண்டப்படும் அபாயம்……….

அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது மண்.பயிர்கள் வளர மண்ணின் சத்துக்களை வகைகளாகவும் விகிதத்திலும் பிரிக்கின்றனர் ஆய்வளர்கள்.

அவைகள் கரிமச்சத்து,தழைச்சத்து எனவும் விகிதத்தில் 24:1 என்ற அளவில் இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். ஆனால் தற்பொழுது அதிக அளவில் ரசாயன உரங்களின் பயன்பாட்டால் மண்ணில் கரிம-தழைச்சத்தின் விகிதம் 10:0.4 எனக்குறைந்துள்ளது. பொதுவாக ஒரு சதுர அடி மண்ணில் இருக்க வேண்டிய 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

தெடர்ந்து ரசாயன உரங்கள் மற்றும் அதிக அளவில் பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால் மண் மடலாகிறது ..

இதுகுறித்து கூறும் அறிவியல் மண் ஆய்வாளர்கள் விவசாய நாடான இந்தியாவில் 35 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய விவசாயத்திற்க்கு விளைநிலத்தின் மேல்மட்ட மண்தான் உகந்ததாக இருக்கும். தற்பொழுது 33 சதவீதம் மேல்மட்ட மண் பல்வேறு காரணங்களால் பயனற்றுள்ளது…

ALSO READ  யார் இந்த தலிபான்கள்? பாகிஸ்தான் ஆதரவுடன் உருவானது எப்படி? முழு பின்னணி…!

2050 -ம் ஆண்டிற்குள் விவசாயத்திற்குரிய மேல்மட்ட மண்ணில் 90 சதவீதம் இயற்கை சீற்றம் செயற்கை அணுகுமுறைகளால் சுரண்டப்படும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர் .. இதனால் மகசூல் 50 சதவீதம் வரை பாதிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகின்றனர்.

மண் அரிப்புக்கு முக்கிய காரணம் மழைக்காலத்தில் ஏற்படும் மண் அரிப்பானதே ஆகும்.இதனைத்தடுக்க ஆங்காங்கே வயலில் வரப்புகள், மண்மேடுகள், தடுப்பணைகளை அமைத்து மண்ணின் மேல்மட்டத்தையும் மண்அரிப்பையும் தடுக்கலாம். இது மட்டும் இல்லாமல் காற்றால் ஏற்படும் மண்அரிப்பைத் தடுக்க வெட்டிவேர், லெமன்புல், தீவனப்பயிர் ஆகியவற்றை நெருக்கமான முறையில் பயிரிடலாம் எனவும் மேலும் தேக்கு, மூங்கில்,மாகோகனி ஆகியவற்றின் மூலமும் மண்ணின் வளத்தை மேம்படுத்த முடியும் என்கின்றனர்.

ALSO READ  அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பொருளாதார ஆலோசகராக WWE Vince McMahon நியமனம்...

உழவுக்கருவிகளை கொண்டு மண்ணை சரியான முறையில் சமதளப்படுத்தி அறிவியலின் புரிதலோடு வேளாண் தொழிலில் ஈடுபடுவதால் ரசாயன உறங்களை குறைத்து மேல்மட்ட மண் சிதையாமலும் இயற்கையோடு அங்கக வேளாண்மை மூலம் மண் வளத்தை காக்கலாம்……


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.. அவர்களுக்கும் சேர்த்து தான் கொரோனா பரிசோதனை செய்யப்படும்- ட்ரம்ப்…..

naveen santhakumar

7 கோடி ரூபாய் மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை மனைவிக்கு பரிசாக அளித்த கணவர்… காரணம் என்ன..????

naveen santhakumar

இன்று முதல் அமெரிக்க  மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது…..

News Editor