உலகம்

ஜூம் (Zoom) வீடியோ காலில் பிரேசில் அதிபர் முன்பு நிர்வாணமாக தோன்றிய நபர்.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரேசிலியா:-

கொரோனா ஊரடங்கு குறித்து பிரேசில் அதிபர் முக்கிய நபர்களுடன் மேற்கொண்ட Zoom வீடியோ காலிங் கடைசியில் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய நபரால் சங்கடத்தில் முடிந்துள்ளது.

சாவோ பாலோ (Sao Paulo) மாகாணத்தின் தொழில்துறைகளில் கூட்டமைப்பு (Federation Of Industries of the state of Sao Paulo) தலைவர் பாவ்லோ ஸ்கஃப் (Paulo Skaf) மற்றும் பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோ-ன் ஊரடங்கு குறித்தும் தொழில் துறைகள் குறித்தும் ஜூம் வீடியோ கால் மீட்டிங் ஒன்று நடைபெற்றது. இதில்  மேலும் பலரும் கலந்து கொண்டனர்.

Paulo Skaf
courtesy. (warning nudity)

அப்பொழுது ஏதோ ஒன்றை கவனித்த அதிபர் சேர் திடீரென ஸ்கஃப்பை இடைமறித்து, ஸ்கஃப் உங்களுடைய சகா ஒருவர், அதோ அந்த கடைசி சிறிய கட்டத்திலுள்ள, அவர் சரியாக உள்ளாரா? என்றார். 

அப்பொழுது அதிபரின் அருகிலிருந்த தொழில்துறை அமைச்சர் பவ்லோ க்யூடெஸ் (Paulo Guedes), அங்கே ஒரு நபர் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருக்கிறார்  அங்கே அந்த கடைசி கட்டத்தில், வீட்டில் நிர்வாணமாக தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார் க்ரேட் என்றார்.

ALSO READ  பெண் செய்தியாளர் பரிதாபமாக சுட்டுக்கொலை:

மேலும் அந்த நபர் காரசாரமாக விவாதம் மேற்கொண்ட காரணத்தால் சூடாகி விட்டால் எனவே தன்னை தணித்துக் கொள்வதற்காக குளிக்கிறார் என்றார்.

அப்போது கூறிய பொல்சனரோ:- துரதிஷ்டவசமாக நாம் அதை பார்க்க வேண்டியதாகிவிட்டது, இது மிகவும் நமக்கு நடுக்கம் தரக்கூடிய ஒரு புகைப்படம் துரதிஷ்டவசமாக பார்த்தாகிவிட்டது என்றவர்.

வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய நபர் யார் என்று தெரியவில்லை ஆனாலும் அந்த நபர் போபால் நகர தொழில்துறை கூட்டமைப்பின் ஆலோசகர் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது உலக அளவில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்படும் நாடகம் பிரேசில் உருவாகி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் மிக மோசமாக ஜேர் பொல்சனிரோவின் அரசு செயல்படுகிறது என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும் மோசமாக வைரஸால்க்ஷபாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் திகழ்ந்து வருகிறது.

ALSO READ  பிரபஞ்சம் உருவானதன் ரகசியம் வெளிப்படுமா? டெட்ரா குவார்க் என்ற புதிய துகள் கண்டுபிடிப்பு...

பிரேசில் அதிபர் பொல்சனரோ சமூகவியல் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.

இதனிடையே சாவோ பாலோவில் ஆளுநர் ஜோவா டோரியா (Joao Doria) அதிபர் ஜேரின் ஆணைக்கு எதிராக மற்ற ஆளுநர்களுடன் இணைந்து தனது மாகாணத்தில் ஊரடங்கிற்கு உத்தரவிட்டார். மேலும் அனைத்து தொழில் தொழில் நிறுவனங்களின் மூலம் செய்து உத்தரவிட்டார். தற்பொழுது பிரேசிலில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதேபோல கடந்த மாதம் பிரேசிலின் Amapa  மாகாணத்தைச் சேர்ந்த மேஜிஸ்ட்ரேட் கர்மோ அன்டானியோ ட சூஸா (52) (Judge Carmo Antonio de Souza)  ஒரு வழக்கு தொடர்பான வீடியோ கால் மீட்டிங் என்பது மேலாடை இல்லாமல் மீட்டிங்கில் பங்கெடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

courtesy.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..

Shanthi

மது அருந்தினால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதா??? என்ன சொல்கிறது WHO???

naveen santhakumar

ஓய்வு பெற்றது கம்போடியாவின் ஹீரோ மகாவா எலி…! 

naveen santhakumar