உலகம்

சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்களை நாக்கால் நக்கிய மர்ம நபர்கள் – ஏன் தெரியுமா?…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லங்காஷயர்:-

இங்கிலாந்தில் கொரோனா நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் லங்காஷயரிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இளைஞர்கள் இருவர் தங்கள் கைகளை நாக்கால் நக்கியும் அதை அங்கு உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பதனப் பெட்டியின் கைப்பிடியில் துடைத்தும் வேறு சில உணவுப் பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ALSO READ  வலைத்தளத்தில் வருவதை நம்ப வேண்டாம்; நடிகை அஞ்சலி 

இங்கிலாந்தின் லங்காஷயர் நகரிலுள்ள செயின்ஸ்பரி (Sainsbury’s store) என்ற சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இளைஞர்கள் இருவர் தங்களது கைகளை நாக்கால் நக்கியும் அவற்றை அங்குள்ள உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் மீது துடைத்தும் உள்ளனர்.

மேலும், வேறு சில உணவுப்பொருட்களை தங்களது நாக்கால் நக்கியும் உள்ளனர் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர்.

courtesy.

இதுகுறித்து லங்காஷயர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் மார்டின் கூறுகையில்:-

இந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்கள் முழுவதுமாக கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சேதபடுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் மற்ற சாதாரண நாட்களில் வேண்டுமானால் வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் தற்போது உள்ள இக்கட்டான சூழலில் இதுபோன்ற செயல்களில் மிகவும் கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குரியது.

ALSO READ  எச்சரிக்கை!!!!!கடிதத்தின் மூலம் கொரோனா வைரஸை பரப்ப ஏற்பாடு :

மக்கள் பலர் உணவு பொருட்கள் இல்லாமல் அல்லாடி வரும் சூழ்நிலையில், இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளது நிச்சயம் தண்டனைக்குரிய குற்றம் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

20 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை..13 வாரங்களில் உயிரிழந்த அவலம்.. பதற வைக்கும் காரணம்

Admin

சீனாவின் ஆதிக்கத்திலிருந்து தைவானை மீட்ட லீ லீ டெங்-ஹுய் மறைவு…

naveen santhakumar

லிபியா தலைநகர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி மீது வான்வெளி தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

Admin