உலகம்

லிபியா தலைநகர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி மீது வான்வெளி தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2011-ம் ஆண்டு லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அரசுப்படையிடம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ALSO READ  கொரோனாவால் பலியான தாயின் இறுதிசடங்கில் மகள் பலி...

இந்த சண்டையில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்திட்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியின் காட்ரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ பள்ளி மீது நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்று அதிகரிப்பு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகல்

News Editor

மக்கள் தவிப்பு……உலகம் முழுவதும் ஜி-மெயில்,கூகுள் டிரைவ்,யூடியூப்…போன்ற தளங்கள் பாதிப்பு….:

naveen santhakumar

2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும்…ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Admin