உலகம்

18000 கிலோமீட்டர் பயணம் செய்த பாட்டில்…!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெர்மனியின் ரைன் நதியில் எட்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய பாட்டில் ஒன்று 18,000 கிலோ மீட்டர் கடந்து நியூஸிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

ஜெர்மனியின் பான் நகரில் சேர்ந்த கிறிஸ்டியன் கோகோஸ் (Christian Gogos) என்பவரது பிள்ளைகள் Sila மற்றும் Maja மற்றும் இவரது நண்பர்கள் Jon மற்றும் Frida ஆகியோர் எட்டு வருடங்களுக்கு முன்பு சிறிய பாட்டிலில் செய்தி ஒன்றை எழுதி அந்த பாட்டிலை ரைன் நதியில் வீசி எறிந்தனர். இவர்கள் இந்த சம்பவத்தை இவர்கள் மறந்தே விட்டனர்.

சமீபத்தில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து இவர்களுக்கு பார்சல் ஒன்று வந்தது.

ALSO READ  மனிதனின் தலையை வெட்டிக் குப்பைத் தொட்டியில் வீசிய நபர் கைது:

அதில் இவர்கள் ரைன் நதியில் வீசிய பாட்டிலும் அதோடு ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் Sila, Frida, Maja, Jon நீங்கள் அனுப்பிய பாட்டில் உள்ள செய்தியை கண்டோம்.

அந்த பாட்டியும் மிக நீண்ட தூரம் பயணித்து நியூசிலாந்து வரை வந்துள்ளது. அதை உங்களுக்கு திருப்பி அனுப்பி உள்ளோம் என்று எழுதி இருந்தது.

ALSO READ  உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் இவர் தான் - சாதனைப் படைந்த பின்லாந்து பெண்

அந்த கடிதத்தில் Scott, Julia, Lea மற்றும் Alice Joy ஆகியோரின் பெயர்களும் கையொப்பமும் இருந்தது.

தங்களுடைய பாட்டில் கிட்டத்தட்ட 18,000 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்றது கிறிஸ்டியன் குடும்பத்தினரை ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், இதில் ஒரே ஒரு ஏமாற்றம் என்னவென்றால் கடிதத்தை அனுப்பிய Scott, Julia, Lea மற்றும் Alice Joy தங்களுடைய முகவரியை எழுதாமல் விட்டுவிட்டனர்.

எனவே அவர்களை கண்டுபிடிக்க சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கிறிஸ்டியன் குடும்பத்தினர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரானின் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

Admin

வேலைக்கு போக, இல்ல வீட்ட விட்டு போ ; திட்டிய தந்தையை தீர்த்துக்கட்டிய மகன்…!

naveen santhakumar

உலக தொழிலாளர் தினம் உதயமானது எப்படி…

naveen santhakumar