உலகம்

உலக தொழிலாளர் தினம் உதயமானது எப்படி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மே தினம் நம்மில் சிலருக்கு ஒரு பொதுவிடுமுறை மட்டுமே! ஆனால் இது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதன் பின்னணி தெரியுமா?

19ஆம் நூற்றாண்டில் உலகின் பல இடங்களில், பாதுகாப்பற்ற மோசமான சூழலில், தொழிலாளர்கள் 16 மணி நேரம் உழைக்கவேண்டிய நிலை இருந்தது. அதனையடுத்து தொழிலாளர்களின் உரிமைக்காக உலகெங்கிலும் பல போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

1904ஆம் ஆண்டு ‘Second International’ எனும் சமூகநல அமைப்பு, மே முதல் தேதியை அனைத்துலக உழைப்பாளர் தினமாக அறிவித்தது.

காலம் காலமாக மறுக்கப்படும் தங்களது உரிமைகள் குறித்து எந்த விழிப்புணர்வு இல்லாமலே இருந்தது தொழிலாளர் வர்க்கம். இதன் ஒரு பகுதியாகதான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர்.

இதனால், கொதித்தெழுந்த தொழிலாளர்கள் முதன் முதலாக அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்டு எழுப்பிய உரிமைக்குரல் அடக்கப்பட்டது. உறங்குவதாய் எண்ணப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்குரல் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது.

இம்முறை தொழிலாளர்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. அதனால் அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் 10 மணி நேர வேலை என சட்டமியற்றப்பட்டது. இது தோல்வியல்ல, தொடங்கப்போகும் புதிய சகாப்தத்தின் தொடக்க வெற்றி என நினைத்த தொழிலாளர்களின் போராட்டம் ஓயவில்லை.

1886-ம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஒன்று பட்ட வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, சின்சினாட்டி, பால்டிமோர் என பெரும்பலான அமெரிக்க நகரங்களில் 8 மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை முன்னிறுத்தி தொழிலார்கள் வீதிக்கு வந்து போராடினர்.

சிகாகோவில் மட்டும் 70,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற கார்ல் மார்க்சின் அறைகூவலின் அர்த்தம் உணர்ந்து, அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் உலகின் முதல் தொழிலாளர் இயக்கம் உருவாக்கப்பட்டது.

ALSO READ  NASA-வின் அதிர்ச்சி அறிக்கை.....இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்.....

அமெரிக்க முதலாளித்துவ அரசின் அடக்குமுறைகளை மீறி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள், 8 மணிநேர வேலைநேரத்தை அமல்படுத்தக்கோரி, 1886 மே 1ம் தேதி மற்றும் அதையொட்டிய நாட்களில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

1886 ஆண்டு மே 3ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ‘மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்’ 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது ஆளும் வர்க்கத்தின் காவல் படை. 6 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர் பலர் படுகாயம் அடைந்தனர்!

இதை வன்மையாக கண்டித்து மறுநாள் சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் பெரும் கண்டன கூட்டத்தை அமைதியாக தொழிலாளர்கள் நடத்தி முடிக்கும் தருவாயில் அங்கே திடீரென்று நிகழ்த்த குண்டுவெடிப்பில் ஒரு போலீஸ் சார்ஜென்ட் இறந்துப்போக – காவல்படையினர் மற்றும் தொழிலாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த முக்கியமான தொழிலாளர்கள் தலைவர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும் கைது செய்து 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது முதலாளித்துவ அரசின் நீதி துறை! இதற்கெதிராக எழுந்த மக்கள் போராட்டத்தை அமெரிக்கா அரசு அட்டூழியமாக நசுக்கி கொண்டிருந்த வேளையில் – அரசின் கடுமையான அடக்குமுறை சட்டங்கள் தொழிலாளர் அமைப்புகளை குறிவைத்து செயல்பட்டது. 

நவம்பர் 11, 1887 – தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் 4 பேர் தூக்கில் இடப்பட்டனர்.

இதனால் தொழிலாளர்களின் எழுச்சி சிறு பின்னடைவை சந்தித்திருந்தாலும் மறுபடியும் முழுவீச்சாக பாட்டாளி வர்க்கம் தனது போராட்டங்களை முன்னெடுத்தது! எட்டு மணி நேர வேலைநாள் கோரிக்கை முழக்கங்கள் தொடர்ந்து ஆதிக்க வர்க்கத்தின் மேல் இடியாக இறங்கியது! 

ஜூலை 14, 1889 – இரண்டாம் அகிலத்தின் பாரிஸ் மாநாட்டில் சிகாகோவின் ஹேமார்க்கெட் அரசு வன்முறை நிகழ்வுகளையும் மற்றும் உள்நோக்கத்துடன் தொழிலாளர்கள் தலைவர்களை தூக்கிலிட்டதையும் கண்டித்தார்கள்! மேலும் வலுப்பெற்று வரும் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைநாள் போராட்டத்திற்கு ஆதரவாக, சர்வேதேசிய பாட்டாளி வர்க்கத்தை திரட்டவும் – 1890 மே1 ஆம் தேதியை ‘8 மணிநேர வேலைதினத்திற்கான’ சர்வேதேச நாளாக அறிவித்தது இரண்டாம் அகிலத்தின் மாநாடு.

ALSO READ  நேரலையில் நிருபரை துரத்திய பன்றி - வைரலாகும் வீடியோ

1890 மே 1 ஆம் தேதி பிரமிக்கத்தக்க வகையில் உலகத்தில் உள்ள பல பெருநகரங்களிலும் 8 மணி வேலை நேரத்திற்கான ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும், செங்கொடி அணிவகுப்புகளும் தொழிலாளர்களால் நடத்தப்பட்டது.

ப்ரஸ்ஸல்சில் (Brussels) நடந்த அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் , தொடர்ந்து ‘8 மணி வேலைநேர’ கோரிக்கையை முன்னெடுக்கவும், தொழிலாளர்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தவும் மற்றும் நாடுகளிடையே சமாதானத்தை வலியுறுத்தவும் மே முதலாம் தேதி ஆர்ப்பாட்டங்களை பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் தொழிற் கூடங்களில் வேலையை நிறுத்தி விட்டு சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையில் இருந்து தன்னைவிடுவிக்க தொழிலாளர்கள் எழுச்சியோடு அணிவகுக்கும் தினமானது மே 1.

தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் அமெரிக்க அரசு 1890-ம் ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று பணிந்தது. இன்றும் பல நாடுகளில் தொழிலாளர்கள் சுரண்டப்படும் நிலை இருந்தாலும் அடிப்படை உரிமைகள் பெற்று தொழிலாளர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதற்காக மே ஒன்றாம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ரஷ்யா, கியூபா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளில் மே ஒன்றாம் தேதி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தினமாக கருதப்படும்.

இந்தியாவில் தொழிலாளர் தினம் முதன்முதலில் சென்னை மாநகரில்தான் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு மே 1ல் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

இதன் நினைவாக சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை 1959ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு, இன்றும் உழைப்பாளர்களின் பெருமையை பறைசாற்றிக் கொண்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தலிபான் ஆதரவு கணக்குகள் முடக்கம்- பேஸ்புக் எச்சரிக்கை …!

naveen santhakumar

‘RRR’திரைப்பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..

Shanthi

டெல்லி-லண்டன் பேருந்து வசதி;கட்டணம் எவ்ளோனு கேட்டா??? ஹார்ட் அட்டாக் வந்திடும்!!!!!!

naveen santhakumar