உலகம்

நகரும் விண்கற்களை கண்டுபிடித்த அரியலூரைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு நாசா பாராட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

நகரும் விண்கற்களைக் கண்டுபிடித்த அரியலூரைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பாராட்டு சான்றிதழ் அளித்துள்ளது.

அமேரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து செயல்படும் பெங்களூரு சிக்குரு டி.ஏ.எப்.இ மற்றும் ஹவாய்ல் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆப்பிள் டெலஸ்கோப் மூலம் பூமியை நோக்கி வரும் விண்கற்களை இரவு நேரங்களில் படமெடுத்து அதை அறிவியல் ஆர்வலர்களுக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறனர்.

ALSO READ  Zoom App..திரையில் மாணவர்கள்.. கருப்பு கவுனில் ரோபோ. வித்தியாசமான பட்டமளிப்பு விழா….
Making an Impact: Lights, Camera and Asteroid! – Vissiniti

பூமியை நோக்கி வரும் விண்கற்களை அறிவியலாளர்கள் இனம் கண்டு அதன் ஆய்வறிக்கையை சிக்குரு கொலாப் நிறுவனத்திற்கு அனுப்புவார்.

பெங்களூரு சிக்குரு டி.ஏ.எப்.இ கொலாப் நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளைக் கண்டுபிடிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறது

NASA: Latest News, Videos and NASA Photos | Times of India

இப்பயிற்சியில் அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை கவிதா , மற்றும் கருப்பூர் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கிரிஜா ஆகியோர் நகரும் விண்கற்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சியில் கடந்த ஜூலை மாதம் முதல் கலந்துகொண்டனர்.

ALSO READ  அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

பூமியை நோக்கி வரும் நகரும் விண்கற்களை ஆப்பிள் டெலஸ்கோப் மூலம் ஆசிரியை கிரிஜா மற்றும் ஆசிரியை கவிதா இருவரையும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அரிய கண்டுபிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளதோடு ஆசிரியை கிரிஜா மற்றும் ஆசிரியை கவிதா கண்டுபிடித்த விண்கற்களுக்கு அவர்களே பெயர் சூட்டுவதற்கான அனுமதியும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனைவிக்கு தலைவாரியது குத்தமா? … கைது செய்த குவைத் அரசு

Admin

உலகை உலுக்கிய குழந்தை மரணம்- 3 பேருக்கு 125 ஆண்டுகள் சிறை தண்டனை. 

naveen santhakumar

கொரோனா தொற்றின் மோசமான பரவல் காரணமாக ஜெர்மனியில் பிப்ரவரி-14 வரை ஊரடங்கு நீட்டிப்பு :

naveen santhakumar