தமிழகம்

100 நாள் வேலை – இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டால் தான் சம்பளம் – மூதாட்டி செய்த செயல் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி அலமேலு (70).

ஒரே நாளில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 70 வயது மூதாட்டி... தற்போது  நிலைமை என்ன? | 70-year-old woman who was vaccinated with two doses in one  day

கடந்த ஆகஸ்டு 15ஆம் தேதி அருகில் உள்ள சரபோஜிபுரம் பள்ளியில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு கோவிஷில்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார். தொடர்ந்து அருகில் இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த அலமேலுவை மருத்துவ பணியாளர்கள் வரிசையில் நிற்க கூறியுள்ளார்கள்

ALSO READ  குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து - சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதலமைச்சர்
வேதாரண்யம்: மூதாட்டிக்கு ஒரே நாளில் 2 முறை கொரோனா தடுப்பூசி…  மருத்துவமனையில் சேர்த்து கண்காணிப்பு! - Tamilnadu Now

இதனால் மீண்டும் வரிசையில் சென்றதால் கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்போது ஆதார் விவரங்களைப் பதிவு செய்துள்ளார் அலமேலு. மேலும், ஒரே நாளில் 2 தடுப்பூசி போடப்பட்டுள்ளார் என்ற தகவலை செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அலமேலு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு நாள் கண்காணிப்பிற்கு பின் வீடு திரும்பினார்.

ALSO READ  கள்ளக்குறிச்சி சம்பவம் - அரசின் உத்தரவை மீறிய பள்ளிகள்…

100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் அனைவரும் இரண்டு முறை தடுப்பூசி போட்டால் தான் சம்பளம் தருவார்கள் என்று கூறியதை அடுத்து இவர் இரண்டாவது முறையம் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு கையில் இருக்கும் தடுப்பூசிகளை செலுத்தாமல் மேலும் தடுப்பூசி கேட்கிறது; பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு ! 

News Editor

திராவிட மாடல் ஆட்சிக்கு சென்னை ஒரு ரோல் மாடல்!

Shanthi

தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு!

Shanthi