உலகம்

பென்னு விண்கல் தரையிறங்க வெற்றிகரமாக இடத்தை தேர்வுசெய்த நாசா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாசா நிறுவனம் தனது விண்கல் மாதிரி சேகரிப்பு பணிக்காக, ஒரு வருட ஆய்வுக்குப் பிறகு இறுதியாக ஒரு தளத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. ‘பென்னு’ என்று பெயரிடப்பட்டுள்ள பம்பர வடிவிலான இந்த விண்கல் 492 மீ அகலம் கொண்டது. பூமிக்கு அருகில் உள்ள இது, 2175 ஆண்டு முதல் 2199ம் ஆண்டிற்குள் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பைக் கொண்டுள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘நைட்டிங்கேல்’ என அழைக்கப்படுகிற முதன்மை மாதிரி தளம்,அந்த விண்கல்லின் வடக்கு அரைக்கோளத்தில் ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் ரோபோக்கள்..
 பரிணாம வளர்ச்சி

ஓசிரிஸ்-ரெக்ஸ் என அழைக்கப்படும் விண்கலம், டிசம்பர் 2018 முதல் பென்னுவை பகுப்பாய்வு செய்து வருகின்றது. ஒரு விண்கல்லின் மாதிரிகளை பகுப்பாய்வுக்காக பூமிக்கு திருப்பி அனுப்பிய முதல் அமெரிக்க விண்கலம் என்ற பெருமையை ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பெறும்.

 கரிம சேர்மங்களின் உருவாக்கம்

பென்னுவில் உள்ள நான்கு மாதிரி தளங்களின் திறனை மதிப்பிடுவதற்கு OSIRIS-REx குழு கடந்த சில மாதங்களாக செயலாற்றிவந்தது. பள்ளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களின் படி, அதன் பாறை மேற்பரப்பு பொருள் ‘ரெகோலித்’. அவை நிறத்தில் இருண்டதாகவும், அதன் மேற்பரப்பு ஒப்பீட்டளவில் மென்மையாகவும் இருப்பதைக் காட்டுகிறது. நைட்டிங்கேலில் உள்ள மேற்பரப்பு பொருள் நன்கு பாதுகாக்கப்பட்டு ஒப்பீட்டளவில் புதிதாக வெளிப்படும். இதன் மூலம் OSIRIS-REx விண்கல்லின் ‘சிறந்த’ மாதிரியை எடுக்க முடியும். இதிலிருந்து விஞ்ஞானிகள் பென்னுவின் புவியியல் வரலாற்றை புனரமைக்க முடியும். விண்கற்களுக்கு பறவைகளின் பெயர் அடிப்படையிலான பெயரிடும் முறை பின்பற்றி பென்னு என்ற பெயரும் இடப்பட்டது. இது சூரியன், படைப்பு மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் பண்டைய எகிப்திய பறவை தெய்வத்திலிருந்து எடுக்கப்பட்டது ஆகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லண்டன் வீதிகளில் ஒற்றை மாஸ்க் தவிர ஒன்றுமில்லாமல் சுற்றிய நபர்… 

naveen santhakumar

6300 பேருக்கு போலியான கொரோனா நெகட்டிவ் சான்று- புர்கா அணிந்து தப்ப முயன்ற மருத்துவர் கைது…. 

naveen santhakumar

அழிவின் விளிம்பில் சிங்கராஜா

News Editor