உலகம்

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புது காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கும்- ஆய்வாளர்கள் எச்சரிக்கை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸால் உலகமே திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக வாய்ப்புள்ள காய்ச்சல் ஒன்று சீனாவில் பன்றிகளிடையே பரவி வருகிறது. எந்த நேரத்திலும் இந்த வைரஸ் மனிதர்களைத் ஆபத்து உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது. தற்போது உடனடியான பிரச்சினை இல்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது. இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் சவு சாங். இந்த வைரஸை ஜி4 இஏ எச்1என்1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள்.

ALSO READ  பிரிட்டனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் விமான போக்குவரத்து தடை : உலக நாடுகள் அறிவிப்பு 

இது தொடர்பாக பன்றி தொழிலாளர்களிடம் (Swine Workers) பரிசோதனை (Serological Surveys) மேற்கொண்டதில் அவர்களின் 10.4 சதவீதம் (35/338) பேருக்கு இந்த GA EA H1NI வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 18- 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 20.5  சதவீதம் பேர் (9/44) என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  சீனா எடுத்த அதிரடி முடிவு... காரணம் என்ன..???

ஏற்கனவே சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ்க்கு தடுக்க வழி தெரியாமல் உலகநாடுகள் தவித்து வருகிறது. தற்போது சீனாவில் இருந்து மேலும் ஒரு புதிய வைரஸ் செய்துள்ளது.  இப்பொழுது உலகநாடுகளில் கொடிய வைரஸ்களின் உற்பத்திக் கேந்திரமாக சீனா மாறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிக்டாக் நிறுவனத்தை செப்டம்பர் 15ம் தேதிக்குள் விற்பனை செய்யாவிட்டால் நடவடிக்கை- ட்ரம்ப் அறிவிப்பு…

naveen santhakumar

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம்…!

Shobika

ஆக்டோபசின் மரணப்பிடியில் சிக்கிய கழுகு – காப்பாற்றிய மீனவர்கள்

Admin