உலகம்

லண்டன் to கொல்கத்தா பஸ்… உலகின் நீளமான பேருந்து பயணம்- உண்மை என்ன??..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தா:-

என்னது… லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்கு பஸ் பயணமா? நம்பும்படியாக இல்லையா… ஆனால், விஷயம் உண்மைதான். லண்டனிலிருந்து கொல்கத்தாவுக்கு ஒரு பஸ் இயக்கப்பட்டுள்ளது. பேருந்தின் பெயர் ஆல்பர்ட் ட்ராவல்ஸ் பஸ்.

கடந்த 1957- ம் ஆண்டு ஏப்ரல் 15- ந் தேதி லண்டன் விக்டோரியா பஸ் நிலையத்திலிருந்து கொல்கத்தாவுக்கு தன் சேவையை இந்த பஸ் தொடங்கியது. லண்டனிலிருந்து புறப்படும் பஸ் பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது.

பிறகு, டெல்லி, ஆக்ரா, அலகாபாத், பனராஸ் வழியாக கொல்கத்தாவை சென்றடைந்துள்ளது. லண்டனுக்கும் கொல்கத்தாவுக்கும் மொத்தம் 7,962 கிலோமீட்டர் இந்த பேருந்து பயணித்துள்ளது. இந்த பேருந்து 50 நாட்களுக்கு மேலாக பயணித்து லண்டனிலிருந்து கொல்கத்தா வந்துள்ளது. .

பயணத்தின் போது வியன்னா, இஸ்தான்புல், காபூல், சால்ஸ்பர்க், டெக்ரான், புதுடெல்லி நகரங்களில் பயணிகள் ஷாப்பில் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லண்டனிலிருந்து கொல்கத்தா வர கட்டணம் 85 பவுண்டுகள் கட்டணம். (இன்றைய இந்திய மதிப்பில் ரூ.8000 வசூலிக்கப்பட்டுள்ளது). 

ALSO READ  இந்தியாவை கலக்க வரும் ரெட்மி 5G :

மொத்தமாக, 145 பவுண்டுகள் பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் உணவு, தங்குமிடம், பேருந்து கட்டணம் எல்லாம் அடக்கம். பேருந்தில் ரேடியோ, மின் விசிறி, படுக்கை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

courtesy.

ஆல்பர்ட் பேருந்து நிறுவனம் இதே போல 20 பேருந்துகளை இயக்கி வந்தாக தகவல் உள்ளது. 1970- ம் ஆண்டு வரை இந்த பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இப்போதும், லண்டனுக்கு செல்ல பேருந்து வசதி இருந்தால், விசா நடைமுறைகள் இல்லையென்றால், எவ்வளவு சந்தோஷமான பயணமாக இந்த பயணம் அமையும் என்று நெட்டிசன்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

இந்தப் பேருந்து அன்றைய காலகட்டத்தில் ஏறத்தாழ 11 நாடுகள் வழியாக இங்கியுள்ளது. 1968-1976 வரை ஏறத்தாழ 15 க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டு உள்ளது.

பின்னர் கொல்கத்தாவில் இருந்து பயணிகள் விமானம் வழியாக அன்றைய பர்மாவின் ரங்கூன் நகருக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ரயில்கள், படகுகள் மற்றும் கப்பல்கள் வழியாக ஆஸ்திரேலியாவின் பெர்த் (Perth) நகரை அடைந்துள்ளனர்.

ALSO READ  இந்தியாவில் புதுவித அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் :

பேருந்து மேற்கொண்ட பயணப்பாதை:-

London (England)

Dover (England)

Zeebrugge (Belgium)

Antwerp (Belgium)

Frankfurt (West Germany)

Munich (West Germany)

Salzburg (Austria)

Vienna (Austria)

Zagreb (Yugoslavia)

Belgrade (Yugoslavia)

Sofia (Bulgaria)

Istanbul (Turkey)

Ankara (Turkey)

Trabzon (Turkey)

Tehran (Iran)

Mashhad (Iran)

Herat (Afghanistan)

Kandahar (Afghanistan)

Kabul (Afghanistan)

Rawalpindi (West Pakistan)

Lahore (West Pakistan)

New Delhi (India)

Agra (India)

Allahabad (India)

Banaras (India)

Calcutta (India)

Rangoon (Burma)

Bangkok (Thailand)

Penang (Malaysia)

Kuala Lumpur (Malaysia)

Singapore

Perth (Australia)

Sydney (Australia).


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட நபர்; ஈரான் அதிபராகிறார் இப்ராஹிம் ரைசி: யார் இந்த இப்ராஹிம் ரைசி?

naveen santhakumar

சீனாவில் வெளுத்து வாங்கும் மழை-21 பேர் பலி

Shobika

அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைந்தது…!!!!!

naveen santhakumar