உலகம்

மானை தன் பிடியில் இறுக்கி உணவாக்க துடித்த மலைப் பாம்பு… கடைசியில நடந்த ட்விஸ்ட்!! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாங்காக்:-

தாய்லாந்து நாட்டு உயிரியல் பூங்கா ஒன்றில் மலைப் பாம்பு, ஒன்று புள்ளி மானை தன் பிடியில் இறுக்கிப் பிடித்து இரையாக்கப் பார்த்தது. ஆனால், இரு உயிரினங்களுக்கு இடையிலான சண்டையில் மூன்றாவதாக மனிதக் குறுக்கீடு ஏற்பட்டது. இதனால், சண்டையின் தன்மையே தலைகீழாக மாறியது. இந்த மனித தலையீடு தற்போது பெரும் விவாதம் கிளம்பியிருக்கிறது. 

இந்த வீடியோவை, டூசிட் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்:-

ALSO READ  கொரோனா பரவாமல் தடுக்க பிறந்த குழந்தைக்கு முககவசம்....

தாய்லாந்தின் காவ் கியோவ் உயிரியல் பூங்காவில் இந்த வீடியோ படமாக்கப்பட்டது என்று அவர் சொல்கிறார். காரிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு மலைப் பாம்பு, மானை அப்படியே தன் பிடியில் இறுக்குகிறது. மலைப் பாம்புகள் பொதுவாக இரையைக் கொல்வதற்குப் பயன்படுத்தும் முறைதான் இது. பாம்பு, கிட்டத்தட்ட மானின் கதையை முடிக்கும் நேரத்தில், ஒரு குச்சியை வைத்து அதை உசுப்புகிறார் ஒரு மனிதர். 

என்னவென்று புரியாத பாம்பு, பிடியைத் தளர்த்துகிறது. இதுதான் சரியான தருணம் என்று உணரும் மான், துள்ளி குதித்து ஓடுகிறது. மீண்டும் உயிர் வாழ அதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது.

ALSO READ  தாய்லாந்தில் அவசர நிலை பிரகடணம்:

அந்த மனிதரின் செயல் சரியா? தவறா? எனக் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில்  மூன்றாம் நபர் அதாவது மனித தலையிட்டால் இந்த உணவுச் சங்கிலியின் படிநிலையை தலைகீழாக மாறியுள்ளது என்று விவாதம் எழுந்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கண்ணீர் விட்டு அழுதாரா இத்தாலி பிரதமர் உண்மை என்ன??

naveen santhakumar

சீனாவை சீண்டிய வாஷிங்டன் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) – பத்திரிக்கையாளர்களைவெளியேற்றிய சீனா…

naveen santhakumar

மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா…. இத try பண்ணுங்க…

Admin