உலகம்

நன்றி கனடா: மூன்றாவது முறையாக பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒட்டாவா:-

கனடா நாட்டில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலையும், பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளதை அடுத்து, லிபரல் கட்சியின் தலைவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.

Let's Talk About Sanctions, Taliban Are Terrorists, Says Justin Trudeau

2015-ம் ஆண்டு கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 6 ஆண்டுகளில் சந்திக்கும் 3-வது பொதுத் தேர்தலாகும். கனடா நாட்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதனால், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக பிரதமராகயிருக்கிறார். கனடா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பிரதமராகியிருக்கிறார்.

இந்நிலையில் தனது வெற்றி குறித்து ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி கனடா. நீங்கள் வாக்களித்தமைக்கும். லிபரல் கட்சியின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும் மிக்க நன்றி. வளமான எதிர்காலத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நாம் கனடாவை முன்னோக்கி அழைத்துச் செல்லப் போகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

ALSO READ  கனடாவில் கடும் வெப்பம்....பலர் உயிரிழப்பு....பலர் பாதிப்பு....!!!!

இந்த முறை ஜஸ்டினை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சியின் எரின் ஓ டூலிக்கே வெற்றி வாய்ப்பிருப்பதாக கருத்துக் கணிப்புகள் பலவும் தெரிவித்தன. ஆனால், ட்ரூடோ அவற்றை முறியடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளார்.

ALSO READ  82 ஆயிரம் குழந்தைகளுக்கு தொற்று…!
Canada's PM, Justin Trudeau is pelted with gravel on trail - New York Daily  News

கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒன்டோரியோவில் சிலர் ட்ரூடோ மீது கற்களை வீசினர். இதனால் ட்ரூடோவின் செல்வாக்கு சரிந்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. இருப்பினும் அத்தனை கணிப்புகளையும் முறியடித்து ட்ரூடோ வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. இருப்பினும் லிபரல் கட்சி ஆட்சி அமைக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

WWE- ல் இருந்து விடைபெற்றார் 90’ஸ் கிட்ஸ்களின் திகில் நாயகன் ‘தி அண்டர்டேக்கர்’!..

naveen santhakumar

கொரோனாவால் பாதித்த நடிகை படப்பிடிப்பிற்கு சென்றதால் அதிர்ச்சி !

Admin

மக்களுக்கு இலவச ரயில் பயணம்!

Shanthi