உலகம்

நாட்டில் ஒரு கோடி பேருக்கு நான்கு வென்டிலேட்டர்களே உள்ள அவலம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


டாகர் (செனகல்):-

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளே செய்வதறியாது தவித்து வருகின்றன. தினம்தோறும் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள் . இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு தேவைப்படும் சுவாசக் கருவிகளை வாங்கப் பல நாடுகள் முயலும்போது பல ஆப்பிரிக்க நாடுகளில் சுவாசக் கருவிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

தெற்கு சூடானில் 11 மில்லியன் மக்கள் தொகை உள்ளது நான்கு துணை அதிபர்கள் உள்ளனர், அதேபோல அந்த நாட்டில் 4 சுவாசக் கருவிகளே (Ventilators) உள்ளன. கொரோனா தொற்றால் நுரையீரலில் சளி அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆக்சிஜனைச் செலுத்த வென்டிலேட்டர் எனப்படும் சுவாசக் கருவிகள் உதவுகின்றன.

அதனால் சுவாசக் கருவிகளைத் தயாரிக்கவும், வெளிநாடுகளில் இருந்து வாங்கவும் பாதிக்கப்பட்ட நாடுகள் முயன்று வருகின்றன. அதேநேரத்தில் ஒருகோடியே 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தெற்கு சூடானில் 24 தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், 4 சுவாசக் கருவிகளும் மட்டுமே உள்ளன. 

சூடான்  உலகிலேயே மிகவும் வெப்பமான நாடுகளில் ஒன்று. இங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு நிலவும். இதனால் இந்த மக்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என்று நம்புகிறார்கள். ஆனால் வெப்பமான நாடுகளில் கொரோனா பநவாது என்ற எந்த ஆய்வுகளும் இதுவரை நிரூபிக்கவில்லை.

ALSO READ  முதன்முறையாக கொரில்லாவுக்கு கண் அறுவை சிகிச்சை

5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் 3 சுவாசக் கருவிகள் உள்ளன. லைபீரியா நாட்டில் ஆறு வெண்டிலேட்டர்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அமெரிக்க நாட்டின் தூதரகத்தில் உள்ளது. புர்க்கினா பாசோவில் 11 சுவாசக் கருவிகளும், சியரா லியோனில் 13 சுவாசக் கருவிகள் உள்ளன.

ALSO READ  கொரோனா நோயாளிகளுக்காக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பயன்படுத்திய வெண்டிலேட்டர் வழங்கிய குடும்பத்தினர்....

கிட்டத்தட்ட 41 ஆப்பிரிக்க நாடுகளில் 2000 வெண்டிலேட்டர்களே உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், 10 ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு சுவாசக் கருவி கூட இல்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

இதேபோல  5.3 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தென்னமெரிக்க நாடான வெனிசுலாவில் 84 தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கைகளே உள்ளன. அங்குள்ள 90 விழுக்காடு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் இல்லை எனத் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட வெனிசுலா நாடு திவாலான நிலைமையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட நாடுகளில் கொரோனா ஏற்பட்டால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“டேனிஷ் சித்திக்கை காப்பாற்றாமல் ஆப்கன் ராணுவம் விட்டுவிட்டது”- தலிபான் ராணுவத்தளபதி….

News Editor

மீண்டும் எபோலா வைரஸ் பரவல்- காங்கோவில் ஒருவர் பலி….

naveen santhakumar

கூகுளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்; அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய அரசு..!

News Editor