உலகம்

பாதைகளை கண்டறிய பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்தும் நாய்கள்!!…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ப்ராக்:-

நாய்கள் பூமியின் காந்தப்புலத்தை பயன்படுத்தி பாதைகளையும் துல்லியமாக கண்டறிவதாக விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர்.

செக் குடியரசில் நாட்டைச் சேர்ந்த வாழ்க்கை அறிவியல் பல்கலைக்கழக (Czech University of Life Sciences Prague) ஆய்வாளர்கள், விர்ஜினியா பல்கலைகழக (Virginia Polytechnic Institute and State University) ஆய்வாளர்கள், ஃப்ளோரிடாவில் உள்ள பேரி பல்கலைக்கழக (Barry University) ஆய்வாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், நாய்கள் வழித்தடங்களை கண்டறிய பூமியின் காந்தப்புலத்தை பயன்படுத்துகின்றன என்று கூறியுள்ளனர். தங்களது இந்த ஆய்வு கட்டுரையை eLife Science Initiative-ல் சமர்பித்துள்ளனர்.  

இந்த கட்டுரையில், நாய்கள் பொதுவாக அவற்றின் மோப்பத்திற்காக பிரசித்தி பெற்றவை. இந்நிலையில் நாய்கள் வழித்தடங்களை பூமியின் காந்தப்புலத்தை பயன்படுத்தி கண்டறிகின்றன என்று செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்விற்காக ஆய்வாளர்கள் நாய்களின் கழுத்தில் ஜிபிஎஸ் பட்டை (GPS Collar) ஒன்றை கட்டினார்கள். அதோடு கேமரா ஒன்றையும் இணைத்திருந்தார்கள். இந்த ஆய்வில் நாய்கள் தங்களுக்குள் துளியும் பரிட்சயம் இல்லாத இடங்களிலும் வடக்கு-தெற்கு திசைகளில் சரியாக செல்வதை கண்டனர். 

ALSO READ  வாலிபரின் மூளையில் இருந்த புழுவை.... ஐந்து வருடங்கள் கழித்து..... வெற்றிகரமாக வெளியில் எடுத்த மருத்துவர்கள்.....
courtesy.

மேலும் இந்த ஆய்வில் 59 சதவீத நாய்கள் வாசனை அடிப்படையிலான (Scent-Based Navigation) வழிகண்டறிதல் முறைகளை பின்பற்றுவதும் (Tracking) தெரியவந்துள்ளது. மேலும், 32 சதவீத நாய்கள் சில இட அடையாளங்கள் (Physical Landmarks) மற்றும் காட்சி தகவல்கள் (Visual Information) நினைவு அடிப்படையில் தங்கள் வழித்தடங்களை கண்டறிவதும் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வானது 2014 முதல் 2017 வரை பல்வேறுவிதமான வானிலை (Weather) சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டது. 

இதில், நாய்கள் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள திசைகாட்டி (Compass) சரியான திசையில் செல்வதற்கும், வழிகளை கண்டறிவதற்கும் உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது. சரி, எவ்வாறு நாய்கள் பூமியின் காந்தப் புலத் துணையோடு தங்களை ஒருங்கிணைத்துக் கொள்கிறது என்பது குறித்த ஆய்வுகளில் நாய்கள் தங்களது சிறுநீர் மற்றும் உடல் கழிவுகள் மூலமாக வடக்கு தெற்கு திசையை ஒழுங்காக சீராக (Align) வைத்து கொள்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.

ALSO READ  பிடனுக்கு சுளுக்கு….குணமடைய வாழ்த்து தெரிவித்த டிரம்ப்:

ப்ராகில் (Prague) உள்ள  வாழ்க்கை அறிவியல் பல்கலைக்கழக (Czech University of Life Sciences) ஆய்வு மாணவர் கத்ரினா பெனேடிக்டோவா (PhD student Kateřina Benediktová) இந்த ஆய்வில் 4 முதல் 27 நாய்கள் வரை இவர் பயன்படுத்தியுள்ளார். மொத்தமாக இந்த ஆய்வில் 170 முதல் 223 க்கு மேற்பட்ட நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இது போன்ற ஆய்வுகள் 1980களிலேயே மனிதர்கள் மீது நடத்தப்பட்டது. மனிதர்களின் கண்கள் கட்டப்பட்டாலும் தங்கள் வீடுகளுக்கு உடலில் இயற்கையாக அமைந்த ஜிபிஎஸ் வழியாக சரியாக செல்கிறார்களா என்பது குறித்து நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு அபராதம் விதித்த போலீசார்.. 

naveen santhakumar

யானைகளை வேட்டையாட அரசு அனுமதி அதிர்ச்சி தகவல்!

Admin

அமெரிக்க நாட்டின் தற்காலிக அதிபராக கமலா ஹாரிஸ் 1.25 நிமிடங்கள் பதவி வகிப்பு

News Editor