உலகம்

லண்டனில் பயன்பாட்டுக்கு வருகிறது கொரோனாவிற்கான தடுப்பூசி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன் : 

லண்டனில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் 3-ம் கட்டமாக சோதனை நிகழ்த்தி வரும் இந்த நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95% சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா சென்றார், மேலும் தனது தந்தை குறித்த தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று அவரின் மகன் கோரிக்கை:

10 நாட்களுக்குள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு பிரிட்டன் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. மேலும், 9-ம் தேதிகளுக்குள் இங்கிலாந்தில் உள்ள பெரும்பலான மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வந்து சேரும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தை பயன்படுத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் முதல் மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டைனோசர்கள் எவ்வாறு இறந்தது- புதிய ஆய்வு முடிவு… 

naveen santhakumar

கூகுள் டிரைவ் செயலி ஆபத்தானதா???

naveen santhakumar

பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறிய கருத்திற்கு எதிராக கொதித்த கம்பீர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன்… 

naveen santhakumar