இந்தியா

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா சென்றார், மேலும் தனது தந்தை குறித்த தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று அவரின் மகன் கோரிக்கை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரணாப் முகர்ஜி( 84) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக் காலத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவரான பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அவர்.

 1969 ஆம் ஆண்டு முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் இவரின் திறமைகளை பார்த்த அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவரை காங்கிரஸுக்கு வரவேற்று இணைத்துக்கொண்டார்.அதே ஆண்டில் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பி ஆனார். பிறகு 1975 1981 1993 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் ராஜ்ய சபாவுக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 1973-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜிக்கு தொழில்துறை, மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.மேலும் மத்திய அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் பிரணாப் முகர்ஜி வகித்தார். 2012ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியதாயிற்று. அதன் பிறகு பிரணாப் தீவிர அரசியலில் இருந்து விலகி தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார்.

ALSO READ  ஜி20 மாநாட்டை புறக்கணித்து கோல்ஃப் விளையாட சென்ற டிரம்ப்:

 கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரணாப்முகர்ஜி சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கை சுவாச வசதியுடன் சிகிச்சை தொடங்கப்பட்டது இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ALSO READ  கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் :

இதனிடையே பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவுகின்றன இதனால் அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது தந்தையின் உடல்நலம் குறித்து எவ்வித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது உடலில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை மேலும் கோமா நிலையை அடைந்தார் .தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார்,என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு உத்தரவு: பசிக்கொடுமையால் உயிரிழந்தவரின் உடலை துணியில் சுற்றி சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம்….

naveen santhakumar

வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு; எய்ம்ஸ் இயக்குனர் வேண்டுகோள் ! 

News Editor

இஸ்ரேலிய நிறுவனத்தின் உதவியோடு அமைச்சர்களை உளவு பார்த்தாரா மோடி?

News Editor