இந்தியா

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை Unfollow செய்தது ஏன் ??- வெள்ளை மாளிகை விளக்கம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

அமெரிக்க வெள்ளை மாளிகை இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உட்பட ஆறு ட்விட்டர் கணக்குகளை அன்ஃபாலோ செய்தது. இது பெரும் அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் அது தொடர்பான விளக்கத்தை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளிநாடு பயணங்களின் போது, சில காலங்களுக்கு மட்டும் வரவேற்கும் நாடுகளின் சில அதிகாரிகளின் ட்விட்டர் கணக்கை ‘ பாலோ’ செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அதிபர்  டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் அலுவலகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்தயாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் ஆகியோரின் ட்விட்டர் கணக்கை வெள்ளை மாளிகை பாலோ செய்தது. வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கையை இந்திய-அமெரிக்கா நட்பின் புது பரிணாம் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த ஆறு ட்விட்டர் கணக்குகளையும் வெள்ளை மாளிகை ‘அன்ஃபாலோ’ செய்தது.

ALSO READ  மேற்குவங்க மாநில முதல்வராக 3-வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார் மம்தா பானர்ஜி !
https://twitter.com/WhiteHouse?s=20

இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறுகையில்:-

பொதுவாக அமெரிக்க அரசின்  மூத்த நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளை மட்டும் தான்  ட்விட்டரில் வெள்ளை மாளிகை பாலோ செய்யும். அதிபரின் வெளிநாடு பயணங்களின் போது, சில ட்வீட்டை மறுட்வீட் செய்வதற்காக சில காலத்திற்கு மட்டும் அந்த நாட்டின் தலைமைகளை ஃபாலோ செய்யும் என்று கூறினார்கள்.

ஆனால் டொனால்ட் டிரம்ப் ஏன் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை அன்ஃபாலோ செய்தார் என்பது குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை. மேலும், கடந்த ஏப்ரல் 10ம் தேதி இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை வெள்ளை மாளிகை பின்தொடர தொடங்கியது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்குகளை வெள்ளை மாளிகை ‘அன்ஃபாலோ’ செய்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும்பேசும் பொருளாகி வந்த நிலையில் இவ்வாறு தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ  கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு : மாநில பேரிடர் அறிவிப்பு

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்:-

எங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெள்ளை மாளிகை’ அன்ஃபாலோ செய்ததை அறிந்து நான் திகைக்கிறேன். இதை வெளிவிவகார துறை அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் தனது ட்வீட்டில் தெரிவித்தார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் கைப்பிடி, முதல் பெண்மணி, துணை ஜனாதிபதி, இரண்டாம் பெண்மணி, புதிய பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் முன்னாள் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஸ்டீபனி கிரிஷாம் உள்ளிட்ட 13 கணக்குகளை வெள்ளை மாளிகை பின்பற்றுகிறது குறிப்பிடத்தக்கது மேலும் 22 மில்லியன் மக்கள் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்கிறார்கள்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பு மருந்தாக இது பலனளிக்கும்: IIT-ன் ஆய்வு முடிவுகள்…

naveen santhakumar

டிரம்ப் பயன்படுத்தும் காடிலாக் காரில் இவ்வுளவு வசதிகளா??

Admin

தனியார் நிறுவனங்கள் பயணிகள் ரயில் கட்டணங்களை தங்கள் விருப்பம் போல் இனி நிர்ணயிக்கலாம்- ரயில்வே வாரியம்.

naveen santhakumar