உலகம்

இன்று உலகப் பெருங்கடல்கள் தினம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகப் பெருங்கடல்கள் தினம் உலக ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

2020 ஆண்டுக்கான உலகப் பெருங்கடல்கள் தின தீம் “Innovation for a Sustainable Ocean”.

பின்னணி:-

1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், ரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா கோரிக்கையை முன்வைத்தது. அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.

அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

உயிர்வளி ஆக்ஸிஜனை வழங்கும் கடல்:-

ஆக்சிஜன் எனும் உயிர் வாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதை குறைக்கிறது.

ALSO READ  மியான்மரில் அத்துமீறும் ராணுவம்; உலகத் தலைவர்கள் கண்டனம்!

மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.

உலக மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் கடல்:-

கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர். மேலும், உலகில் 300 கோடி பேருக்கு கடல் உணவு மூலம் புரோட்டின் சத்து கிடைக்கிறது. 

உலகில் உள்ள அத்தனை உணவு தானியங்களும் அழிந்து போனாலும் கடல் உலகில் உள்ள அத்தனை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் வல்லமை கொண்டது.

வாணிபம்:-

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. 

ALSO READ  ஜெர்மன் போர்க்கப்பல் ரோந்துப்பணியில் இணைகிறது:

கடலை அளிக்கும் மனித செயல்பாடுகள்:-

உலகில் ஆண்டுதோறும் சுமாா் 13 மில்லியன் டன் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் கடலில் கலக்கின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கடலில் கொட்டுவதற்குச் சமம். கடந்த நூற்றாண்டில் உருவான நெகிழிக் கழிவுகளின் மொத்த அளவைக் காட்டிலும், கடந்த 10 ஆண்டுகளில் உருவான கழிவுகள் மிக அதிகம்.

இதன் மூலமாக மொத்த சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான உயிர்கொல்லி நோய்கள் உலகமெங்கும் பரவக்கூடும்.

இந்தப் பெருங்கடல்கள் தன்னுள்ளே எண்ணற்ற இயற்கை வளங்களையும் உயிர் வளங்களையும் கொண்டுள்ளது எனவே நாம் நமது கடல்களை காப்பது நம் கடமை இந்த உலகத்தில் கடலைக் காப்போம் என்று ஒவ்வொருவரும் உறுதி மேற்கொள்வோம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நைஜீரியாவில் பயங்கரவாதம்……பள்ளிகள் மூடும் நிலை…….

Shobika

தேசிய கேமரா தினம் 2020: வரலாறும், பின்னணியும்…

naveen santhakumar

விண்வெளி சுற்றுலா; ஸ்பேஸ் எக்ஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்..!!

News Editor