உலகம்

இன்று உலக செஞ்சிலுவை சங்க தினம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேவை என்றால் என்ன??

பிரதிபலன் எதையும் எதிர்பாராமல் ஒருவரின் தேவையை அறிந்து செய்வதே சேவை.

உலக செஞ்சிலுவை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் உலக செஞ்சிலுவை தினம் மற்றும் உலக செம்பிறை தினம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் என்பன பெயரில் வித்தியாசம் இருந்தாலும்கூட அடிப்படையில் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்னெடுப்பவைகளே. 

அரபு நாடுகளில் சிலுவை குறியீட்டுக்கும், வார்த்தைப்பதத்திற்கும் பதிலாக பிறை எனும் குறியீடும், வார்த்தைப்பதமும் பயன்படுத்தப்படுகின்றது.

தோற்றம்:-

1863 ஆம் ஆண்டு ஹென்றி டுனாண்ட் (Henry Dunant) சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் International Committee of the Red Cross (ICRC) சங்கத்தை தோற்றுவித்தார்.

இவரை கவுரவிக்கும் வகையில் ஹென்றி டியூனண்ட் பிறந்த தினமான மே மாதம் 8ம் தேதி உலக செஞ்சிலுவை சங்க தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

செஞ்சிலுவை சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி??

1828 மே 8 ல் சுவிட்சர்லாந்த் நாட்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட். கல்வியிலும் சிறந்து விளங்கியவர். 

1859 ஆண்டு ஹென்றி டுனாண்ட்  வர்த்தக நோக்கத்திற்காக இத்தாலியின் சோல்பரிநோ நகரத்திற்குச் சென்றார். அப்பொழுது அதே ஆண்டில் ஜூன் 25ல் வட இத்தாலியில் சோல்பரிநோ யுத்தம் நடைபெற்ற போது ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலிய படைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போர்க்களத்தில் குற்றுயிராய் கிடந்தனர்.

ALSO READ  குவியும் சடலங்களால் குழப்பம்: அசந்து தூங்கியவர் உயிருடன் தகனம்... 15 நொடிகளில் சாம்பலான பரிதாபம்...
Battle of Solferino.

இந்த காட்சி ஹென்றி வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஊர் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தார். பகை நிறைந்த அந்த சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாக பேசப்பட்டது. 

1863ல் ஜெனிவாவில் ஹென்றி டுனான்ட், கஸ்டவ் மோய்னியரால் ரெட் கிராஸ் அமைப்பு 25 பேர்களுடன் உருவாக்கப்பட்டது. நிவாரண பணியில் ஈடுபட்ட தொண்டர்களை அடையாளம் காட்டுவதற்காக வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலுவை சின்னம் தேர்வு செய்யப்பட்டது.

RC-ஐ தோற்றுவித்த முக்கிய ஐவர்.

செஞ்சிலுவை சங்கம் ஆரம்பித்த எதற்காக 1906 ஆம் ஆண்டு முதன் முதலில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார் ஹென்றி டுனாண்ட்.

முதலாம் உலகப் போருக்குப் பின்னர் 1922 செக்கோஸ்லோவாக்கியாவில் ஈஸ்டர் திருநாளையொட்டி மூன்று நாட்கள் போர்நிறுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக கொண்டாட தூண்டுகோலாக அமைந்தது.

இனி வரும் காலங்களில் உலகில் எந்த நாடுகளிலும் போர், பஞ்சம், வெள்ளம், புயல், நிலநடுக்கம் ஏற்பட்டால் அந்த இடத்திற்கு நேரடியாக சென்று உதவ வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து ஒரு சமூக அமைப்பை உருவாக்க அனைத்து நாடுகளிடம் ஆதரவு மற்றும் நிதியை திரட்டினார். 

அவரின் விடா முயற்சியால் 1864 ம் ஆண்டு ஆகஸ்ட் -22 ம் நாள் 12 நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவா நகரில் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு உலக செஞ்சிலுவை சங்கம் உதயமானது.

ALSO READ  ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 36 பேர் பலி

பணிகள் என்ன:-

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது பெரும் முயற்சியால் போர் நடைபெறும் இடங்களிலும் மற்றும் புயல்,வெள்ளம், தீவிபத்து, நிலநடுக்கம் ஏற்படும் இடத்திற்கும் நேரடியாக சென்று மருத்துவ உதவிகளை செய்கின்றன.

இது சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நடுநிலையான மனிதநேய அமைப்பாகும். உலகில் மக்கள் பாதிப்பு அடையும் போது சர்வதேச உரிமைச்சட்டத்தின்படி நடைமுறைப்படுத்தும் மனித நேய அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

அதே போல நாடுகள் இடையே போர் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய மனித உரிமைகளை கண்காணிக்கிறது. அவ்வாறு உரிமை மீறல் நடந்தால், உடனே இந்த அமைப்பு சர்வதேச மனித உரிமை நீதிமன்றம் வரை சென்று வழக்கு பதிவு செய்யும். 

இக்கட்டான காலக்கட்டத்தில் நாடுகள் கடந்து, ஒரு மனிதனின் உயிரை காப்பதே செஞ்சிலுவை சங்கத்தின் முதல் பணி. 

முதலில் 15 நாடுகள் மட்டுமே இந்த அமைப்புகளில் இடம்பெற்று இருந்தன. தற்போது 192 நாடுகள் செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்பினராக உள்ளன. 

அந்த நாடுகளில் சுகாதார சேவை, மருத்துவ சேவை, முதலுதவி சேவை, நிவாரணம் என பல்வேறு மனிதாபிமான சேவைகளை அந்தந்த நாட்டின் அரசுடன் சேர்ந்து செய்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவில் கொரோனா வைரஸ்-க்கு போட்டியாக ஹண்டா வைரஸ்…

naveen santhakumar

ஹெலிகாப்டர் மூலம் விலங்குகளுக்கு உணவு வழங்கும் : ஆஸ்திரேலியா

Admin

இவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பெரும் ஆபத்து….உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

Shobika