உலகம்

ஜப்பான் மற்றும் தென் கொரிய நாட்டவர்கள் இந்தியா வர தடை-காரணம் என்ன..???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஜப்பான், ஈரான் என உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில் ஆயிரக் கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 13 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது.

அதே போல ஜப்பானிலும் அதிகளவில் கொரோனா பரவியுள்ளது. சில வாரங்களுக்கு முன் ஜப்பானின் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்த பயணிகள் 650 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ  கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய  அரசு பேருந்துக்கு அபராதம் !

இந்த நிலையில் ஜப்பான், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கூறிய இந்திய தூதரகம்:-

ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதையடுத்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா வர விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளது.

ALSO READ  இந்திய-சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

இதே போல் ஈரானிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து அங்கு பயணம் மேற்கொள்ளவும் தற்காலிக தடை விதித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பதவியை ராஜினாமா செய்த ஸ்வீடன் நாட்டு பிரதமர் :

Shobika

”மேடம், இத நான் உங்க கிட்டச் சொல்லியே ஆகணும். நீங்க அவ்வளவு அழகு”…திரைப்பட பாணியில் நீதிபதியிடம் காதலை தெரிவித்த திருடன்…..

naveen santhakumar

பென்னு விண்கல் தரையிறங்க வெற்றிகரமாக இடத்தை தேர்வுசெய்த நாசா…

Admin