டெல்லி:-
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஜப்பான், ஈரான் என உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில் ஆயிரக் கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 13 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது.
அதே போல ஜப்பானிலும் அதிகளவில் கொரோனா பரவியுள்ளது. சில வாரங்களுக்கு முன் ஜப்பானின் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்த பயணிகள் 650 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜப்பான், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கூறிய இந்திய தூதரகம்:-
ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதையடுத்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா வர விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளது.
இதே போல் ஈரானிலும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து அங்கு பயணம் மேற்கொள்ளவும் தற்காலிக தடை விதித்துள்ளது.