உலகம்

ஏன் leap Year 4 வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இது பிப்ரவரி 29 ல் பிறந்தவர்களுக்கான ஸ்பெஷல் கவர் ஸ்டோரி.

பிப்.29 ல் பிறந்த சில பிரபலங்கள்:-

மொரார்ஜி தேசாய் (Former PM of India).

ருக்மிணி தேவி அருண்டேல் (BharatNatiya Dancer, Freedom Fighter).

நமக்கு ஏன் லீப் வருடம் தேவை?? லீப் வருடம் இல்லாவிட்டால் என்ன நிகழும்??

லீப் வருடம் ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒருமுறை வரும். அதுமட்டுமன்றி ஒவ்வொரு 400 வருடங்களுக்கு ஒரு முறையும் வரும்.

பொதுவாக பிப்ரவரி மாதம் 28 நாட்களைக் கொண்டது. ஆனால் 4 வருடத்திற்கு ஒரு முறை வரும் லீப் வருடத்தில் மட்டும் பிப்ரவரி மாதம் ஒரு நாள் கூடுதலாக அதாவது 29 நாட்களை கொண்டிருக்கும்.

ஏன், இந்த லீப் வருடம் வருகிறது ??

எல்லாம் ஒரு நல்ல காரணத்திற்காக தான். இவ்வாறு 4 வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் வரவில்லை என்றால் குளிர்கால மாதமான டிசம்பர் கடைசியில் கோடை காலமாக மாறும்.

இது தொடர்பான புதிய அனிமேஷன் வீடியோ ஒன்றை ஜப்பான் ஏரோஸ்பேஸ் ஏஜென்ஸியில் (Japanese AeroSpace Agency (JAXA)) வேலை செய்யும் ஜேம்ஸ் ஓ’டொனகு (James O’Donoghue) என்ற விஞ்ஞானி (அதான், நம்ம பூமியில் உள்ள கடல்கள் வற்றினால் எப்படி இருக்கும் என்று சொன்ன அதே விஞ்ஞானி தான்).

ALSO READ  விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள சூரிய வளி மண்டலத்தின் சிக்கலான புகைப்படங்கள்....

இவரே தான் தற்பொழுது நமக்கு ஏன் லீப் வருடம் தேவை என்ற புது கான்செப்டை யோசித்து உள்ளார்.

இவர் தனது ஓய்வு நேரங்களில் வானியல் தொடர்பான புதுப்புது அனிமேஷன் வீடியோக்களை உருவாக்குவதில் செலவிட்டு வருகிறார்.

இதன்படி The Moon’s Retreat From Earth என்ற அனிமேஷனை உருவாக்கினார்.

அதேபோல், ‘The Vasteness of Our Solar System’ என்ற அனிமேஷன் வீடியோவையும் முன்னர் உருவாக்கி உள்ளார்.

இவர் சமீபத்தில் உருவாக்கிய புது அனிமேஷன் வீடியோ தான் 2020-ல் 366 நாட்கள்.

பொதுவாக நமது நாட்காட்டிகள் ஒரு வருடத்தில் 365 நாட்களை கொண்டுள்ளது. ஆனால் சூரியனை பூமி சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365.242 நாட்கள்.

ஜேம்ஸ் உருவாக்கியுள்ள இந்த புதிய அனிமேஷன் வீடியோ லீப் வருடம் கணக்கிடும் முறை இல்லாமல் போனால் அடுத்த 400 வருடங்கள் கழித்து தற்போது இருக்கக்கூடிய மாதங்களின் கால நிலைகள் எவ்வாறு மாறும் என்பதை நமக்கு விளக்குகிறது.

ALSO READ  நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இணைந்து அனுப்பிய ராக்கெட் 19 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது...

Equinox எனப்படும் சம இரவு பகல் நாள் வருடத்தில் இரண்டு முறை அதாவது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்படுகிறது.

இந்த நாட்களில் இரவு-பகல் நேரங்கள் சமமாக இருக்கும்.

ஆனால் லீப் மூலம் ஏற்படப்போகும் மாற்றத்தால் இந்த சம இரவு பகல் நாட்களில் மாற்றம் ஏற்பட்டு, பகல் நீண்டதாகவும் இரவு குறுகியதாகவும் மாறும். இது பூமியின் ஒரு மறுபுறத்தில் இதற்கு அப்படியே நேர்மாறாகவும் அமையும்.

Solstice என்பது அப்படியே Equinox-க்கு நேர்மாறானது. இது வருடத்தில் ஏற்படும் நீண்ட பகல் மட்டும் நீண்ட இரவு இரண்டையும் குறிக்கிறது. இதில் பகல் இரவுகள் சமமற்றது.

ஏனெனில் பூமி ஒரு மார்ச் மாதத்திலிருந்து அடுத்த மார்ச்சுக்கு மாற 365.242 நாட்களை எடுத்துக்கொள்கிறது. இந்த 0.242 நாட்களை 4 வருடங்களுக்கு சேர்ந்து நான்காவது ஆண்டில் 1 முழுநாளாக கணக்கிடுகிறோம்.

ஒருவர் சாதாரணமாக 6 மணிநேரத்தை ஒரு வருடத்தில் சேர்த்துவிட முடியாது. ஏனெனில் அடுத்த நாளே சூரிய உதயம் 6 மணிநேரம் தாமதமாகலாம். ஆனால் இதைஎப்போது செய்யலாம் என்றால், தற்போது உள்ள 24 மணிநேர கடிகாரங்களை கவனத்தில் கொள்ளாது போது- என்றார் ஜேம்ஸ்.

மேலும், நான் தற்போதைய லீப் கணக்கீட்டு முறையை கண்டு வியக்கிறேன். ஏனெனில் இது நமக்கு நமது பூமியில் வானியல் செயல்பாடுகளை குறித்து விவாதிக்க நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியரா????

naveen santhakumar

H-1B விசா ரத்து: தகுதி அடிப்படையில் வழங்க டிரம்ப் உத்தரவு…

naveen santhakumar

துபாயில் நடக்கும் இலக்கிய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக மலாலா பங்கேற்பு :

naveen santhakumar