உலகம்

இலங்கை பள்ளி மாணவர்களுக்கு சீன அதிபரின் மனைவி எழுதிய பதில் கடிதம்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:-

சீனாவில் பரவிய கொரோனா வைரஸிற்கு இதுவரை 3000 பேர் பலியாகி உள்ளனர். 80,000 மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்-கின் (Xi Jinping) மனைவி பென்ங் லியுவான்  (Peng Liyuan) இலங்கையிலுள்ள ‘தேவி பாலிகா வித்யாலயா’ பள்ளி மாணவர்களை பாராட்டி கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தேவி பாலிகா வித்யாலயா பள்ளி மாணவர்கள் கொரோனாவிற்கு எதிராகப் போராடும் சீன அரசை பாராட்டியும் தங்களது நட்பை வெளிபடுத்தியும் கடிதங்கள் மற்றும் ஓவியங்கள் எழுதி அனுப்பி இருந்தனர்.

இதைக்கண்டு நிகழ்ச்சி அடைந்த சீன அதிபரின் மனைவி பென்ங் எழுதிய பதில் கடிதத்தில்:-

ALSO READ  மேற்கு மண்டல படைப்பிரிவின் புதிய கமாண்டராக ஜாங் சுடோங் நியமனம்:

சீனா கொரோனா-வை எதிர்த்துப் கடுமையாக போராடும் இத்தருணத்தில் சிறப்பான இந்த கடிதம் கிடைக்கப் பெற்றோம்.

இந்த ஓவியங்கள் சீன மக்களுடன் இலங்கை மக்கள் கொண்டுள்ள நேர்மையான நட்பினை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த கடிதத்தை நானும் அதிபர் ஜிங்பிங்-ம் மிகவும் விரும்பினோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  கொரோனா எதிரொலி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம் ! 

மேலும் சீன இலங்கை நட்பு பண்டைய காலம் தொட்டு விளங்குகிறது. உங்கள் மூலமாக வருங்கால சீன இலங்கை நட்பை பார்க்கிறேன். நன்றாக கடினமாக படியுங்கள், வாழ்த்துக்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேவி பாலிகா வித்யாலயா பள்ளி மிகவும் பிரபலமானது இந்த பள்ளியில் உள்ள 2,000 மாணவர்களில் இருந்து 43 மாணவிகள் இணைந்து இந்த ஓவியங்களை வரைந்து சீன அதிபரின் மனைவிக்கு இந்த கடிதத்தை எழுதி உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுலைமானியின் இறுதிச் சடங்கால் அமெரிக்கா பீதி

Admin

பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

News Editor

Treasure chest worth $1M found hidden in the Rocky Mountains after a decade of searching.. 

naveen santhakumar