உலகம்

மேற்கு மண்டல படைப்பிரிவின் புதிய கமாண்டராக ஜாங் சுடோங் நியமனம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீஜிங் : 

இந்தியாவுடனான எல்லையைப் பாதுகாக்கும் மேற்கு மண்டல படைப் பிரிவின் கமாண்டராக ஜாங் சுடோங்கை சீன அதிபர் ஜிங் பிங் நியமித்துள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3488 km நீள எல்லை உள்ளது. சீன ராணுவம் எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவுவதும் அவர்களை இந்திய ராணுவம் விரட்டுவதும் அடிக்கடி நடக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சியாக உள்ளது.கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. 

ALSO READ  11,500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழக்கூடிய அரிய நிகழ்வு.. 

இதில் 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.இந்திய ராணுவத்தின் பதிலடியில் 43-க்கும் அதிகமான சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.அதிலிருந்து லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. பதற்றத்தைக் குறைக்க இரு தரப்பிலும் ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுடனான எல்லையில் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீன ராணுவத்தின் மேற்கு மண்டல படைப் பிரிவின் கமாண்டராக ஜாங் சுடோங்கை சீன அதிபர் ஜிங் பிங் நியமித்துள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

News Editor

அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமுக்கு மீண்டும் கொரோனா :

Shobika

ஐரோப்பாவில் கொரோனாவால் உயிரிழந்த 95% பேர் இந்த வயதினர் தான்- WHO….

naveen santhakumar