இந்தியா

கொரோனா எதிரொலி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. ஆனால், எட்டு கட்டங்களாக நடைபெற்று வரும் மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில், நாளை இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ALSO READ  நடிகர் அருண் விஜய் மாமனார் காலமானார் !

இந்நிலையில் கொரோனாவின் 2 ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில், “வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக் கூடாது. வேட்பாளர்கள், முகவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பான தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தைக் கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். முகக்கவசம், கிருமிநாசினி, ஃபேஸ் ஷீல்டு, கையுறை ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யோகா வீடியோ: மோடிக்கு நன்றி தெரிவித்த இவாங்கா…

naveen santhakumar

‘கோவேக்சின்’ போடும் பணி; மத்திய அமைச்சகம் அறிவிப்பு !

News Editor

“நன்றி சொல்ல வேண்டாம்,  நலமுடன் இருந்தாலே போதும்” : நரேந்திர மோடி 

News Editor