சாதனையாளர்கள் தமிழகம்

க.அன்பழகன் கடந்து வந்த பாதை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

1922 -ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் பிறந்தார்

இவரது இயற்பெயர் இராமையா. தமிழ் மீது கொண்ட பற்றால் அன்பழகன் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

1977 முதல் தொடர்ந்து 43 ஆண்டுகளாக திமுக-ன் பொதுச்செயலராக பதவி வகித்தார். இவர் ஒருவர் தான் இந்தியாவில் அதிக நாட்கள் ஒரே பதவி வகித்தவர் என்ற பெருமையையும், சாதனையையும் உடையவர். ஏனெனில் எந்த ஒரு கட்சிக்கும்; இயக்கத்திற்கும் இவ்வாறு ஒரே நபர் நீண்ட நாட்களாக பொதுச்செயலராக இருந்தது கிடையாது.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் B.A தமிழ் பட்டம் பெற்றவர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1944 முதல் 1957 வரை துணைபேராசிரியராகப் பணியாற்றினார்.

ALSO READ  ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

1957-ல் எழும்பூர் தொகுதியில் திமுக-வின் சட்டப்பேரவை உறுப்பினராக முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

1962 -எழும்பூரில் காங்கிரஸ் வேட்பாளர்
ஜோதி வெங்கடாச்சலத்திடம் தோல்வியடைந்தார்.

அதே ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினரானார்.

1962-சென்னை-செங்கல்பட்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார்.

1967 முதல் 1971 வரை திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.

1971 – புரசைவாக்கம் தொகுதியில் வென்று திமுக அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சரானார்.

1975-ல் தலைவர் கருணாநிதியை ஒதுக்கிவிட்டு பலரும் விலகிச் சென்ற நேரத்திலும் விலகாது உடனிருந்தவர் பேராசியர். அதனால் தான் இறுதிவரை கழகத்தில் கருணாநிதிக்கு அடுத்த நிலையில் போற்றப்பட்டார்.

மீண்டும் 1977, 1980-ம் ஆண்டுகளில் புரசைவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்.

ALSO READ  கொரோனாவால் திமுக முன்னாள் செயலாளர் மறைவு- ஸ்டாலின் இறங்கல்

1983-ல் இலங்கை தமிழ் மக்களின் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி கருணாநிதியுடன் சேர்ந்து ராஜினாமா செய்தார்.

1984-ம் ஆண்டு பூங்கா நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

1989-ல் அண்ணா நகர் தொகுதியில் வென்று கல்வி அமைச்சரானார்.

1991- ல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

1996-ல் துறைமுகத்தில் போட்டியிட்டு வென்று மீண்டும் கல்வி அமைச்சர்.

2001-ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.

2006- ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் வென்று நிதி அமைச்சரானார்.

2011-வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.

2016- சட்டமன்ற தேர்தலில் வயோதிகம் காரணமாக போட்டியிடவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar

மல்லிகை பூ கேட்டவருக்கு தவளை இட்லி – காத்திருந்த அதிர்ச்சி!

naveen santhakumar

புதிய தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம்

naveen santhakumar