உலகம்

உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியும் வேட்டையாடப்பட்ட சோகம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கென்யா:-

கென்யாவில் வளர்ந்து வந்த உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டியுடன் கொலைசெய்யப்பட்டுள்ளது. 

கென்யா வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த ஒரு தாய் ஒட்டகச்சிவிங்கியும் அதன் குட்டியும், நேற்று எலும்புக்கூடுகளாக கெரிஸ்ஸா என்ற கிழக்கு கென்யா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் அதே வேட்டைகாரர்கள் அதன் ஆண் கன்றை மட்டும் விட்டுச் சென்றுள்ளனர்.

வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட இந்த ஒட்டகச்சிவிங்கிகள், இறந்து சில மாத காலம் ஆகியிருக்கலாம் என அதிகாரிகள் கணித்திருக்கிறார்கள்.

ALSO READ  பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு..

Leucism என்று அழைக்கப்படும் ஒரு மரபணு மாற்றம்தான், இந்த ஒட்டகச்சிவிங்கிகளின் வெள்ளைத்தோலுக்குக் காரணம்.

உலகிலேயே எங்கள் நாட்டில் மட்டும்தான் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளைப் பராமரித்துவந்தோம். அரிய வகை உயிரினங்களைப் பாதுகாப்பதில் நாங்கள் இன்னும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது என்று, கென்யா வனவிலங்கு சரணாலயத்தின் மேலாளரான மொஹம்மத் அகமத் நூர் தெரிவித்தார். 

ALSO READ  இறந்துவிட்டதாக நினைத்த நபர் பிணவறையில் எழுந்ததால் அதிர்ச்சி:

இந்த பூமி, மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான இடம். ஒவ்வொரு சுற்றுச்சூழலில் வசிக்க எல்லா உயிரினங்களும் பங்குவகிக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் இந்த சுற்றுச்சூழலின் அங்கம் தான், இவ்வாறு அவை அழிவைச் சந்திப்பது பெரும் ஆபத்தில் போய் முடியும் 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் மாஸ்க் அணியனும்னா ஊழல் ஒழியனும்: அதிபர் அதிரடி… 

naveen santhakumar

இறந்த பின் சவப்பெட்டியில் எப்படி இருப்போம்? லண்டனில் உருவாகியுள்ள சவப்பெட்டி கிளப்….

naveen santhakumar

அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மறைந்த தினம்

Admin