இந்தியா லைஃப் ஸ்டைல்

முழு ஊரடங்கு…. க்ளீடென் ஆப்-பில் அலைமோதும் இளைஞர்கள்… அப்படி என்ன இருக்கு இந்த ஆப்-பில்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் முழு 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஏற்கனவே இந்தியா முழுவதும் பல நகரங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பலர் தங்கள் நேரத்தை இணையத்தில் செலவழித்து வருகின்றனர்.ஏராளமானோர் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம்  என்று தங்கள் நேரத்தை ஆன்லைனிலேயே செலவழித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சமீப நாட்களில் ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் இளைஞர்கள் அதிக அளவில் இணைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் குறிப்பாக க்ளீடென் (Gleeden) என்ற ஆன்லைன் டேட்டிங் ஆப்-ன் மவுசு அதிகரித்துள்ளது. ஏராளமானோர் சமீபத்தில் இந்த க்ளீடென் ஆப்-ல் இணைந்துள்ளனர்.

ALSO READ  Apuestas Deportivas Perú 2022 Casas de Apuestas Per

இது திருமணத்தை தாண்டிய உறவுக்கான (Extra Marital Affair) ஒரு செயலி ஆகும். 2009 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று இதை தயாரித்தது, 2010 முதல் உலகமெங்கும் இது பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த செயலில் திருமணமானவர், விவாகரத்தானவர், பிரிந்து வாழ்பவர்கள், சிக்கிள்ஸ்  என எல்லா தரப்பிற்க்கும் தொடங்கப்பட்டது. இந்த செயலியின் அதி உன்னத பணி திருமணத்தை தாண்டிய உறவுகளை ஏற்படுத்தி தருவது தான்.

இதில் முக்கியமான விஷயம் என்றால் இந்த செயலி பெண்களால் உருவாக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

ALSO READ  அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு !

இந்த Gleeden என்பது கர்டன் ஆஃ ஈடன் (ஆதாம்- ஏவாளின் தோட்டம்) ஆதாவது Glee+ Eden. 

இந்தியாவில் பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, நொய்டா, குர்கான், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஆண்களால் அதிக அளவில் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல் பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் பெண்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதத்தில் 8 லட்சம் பேர் இதில் பதிவு செய்து இருந்தனர். தற்பொழுது 70% இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த செயல் 2017 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பா.ஜ.க மிரட்டல் மற்றும் கவர்ச்சி அரசியல் செய்கிறது : ஆம் ஆத்மி குற்றசாட்டு 

News Editor

Glory Casino Online ️ Play on official site in Banglades

Shobika

அழகை மெருகேற்ற பயன்படும் பன்னீர் :

Shobika