இந்தியா

இந்தியாவில் உச்சத்தை எட்டிய கொரோனா… இன்னும் இரண்டு வாரங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 10,000த்தை தாண்டும்??…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை 1824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2032, 150 பேர் குணமடைந்துள்ளனர், 58 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1824 ஆக உள்ளது.

கடந்த 48 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை 1751 (37 சதவீதம்).

கடந்த நான்கு நாட்களில் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த இரு வாரங்களுக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் இந்தியாவில் அடுத்த சில மாதங்களுக்குள் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலை ஏற்படும்.

ALSO READ  ஊரடங்கால் வருமானமின்றி தவித்த கூலித்தொழிலாளி தற்கொலை....

வடகிழக்கு மாநிலங்களை பொருத்தவரையில் அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகியவற்றில் தல ஒரு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது மற்ற வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று எதுவும் பதிவாகவில்லை.

மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தான் கடந்த இரண்டு நாட்களில் அதிக அளவு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளில் எண்ணிக்கை 62இலிருந்து 227 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 165 இலிருந்து 254 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள்....

மாவட்ட ரீதியாக மும்பை 81 பதிவாகியுள்ளது, காசர்கோட்டில் 78, பெங்களூருவில் 43, ஹைதராபாத்தில் 27 உத்திரப்பிரதேசத்தின் கௌதம புத் நகரில் 23 என நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளது.

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது வரை இந்தியாவின் கொரோனா பரவளையம் கிடைமட்டமாக தான் உள்ளது. சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் தங்களது கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் மிகவும் கவனமாக உள்ளது.

முன்பு அமெரிக்காவின் கொரோனா பரவல் பரவளையம் சீனாவுடன் ஒப்பிடுகையில் கிடைமட்டமாக தானிருந்தது. ஆனால் திடீரென அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளது எனவே இந்தியா மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- ஸ்மிருதி இராணி… 

naveen santhakumar

சீனாவின் கொரோனா வைரஸால் மற்ற நாட்டு மக்களும் அவதி

Admin

ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது …!

naveen santhakumar