உலகம்

ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 108 பேர் குணமடைந்துள்ளனர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 கோலாலம்பூர்:-

மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 108 பேர் குணமாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவிற்கு எதிரான போரில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய அந்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது இயக்குனர் Dr நூர் ஹிஷம் அப்துல்லா (Dr Noor Hisham Abdullah):-

நேற்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,908 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அதே சமயம் நேற்று ஒரே நாளில் 108பேர் குணமாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக 645 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.  அதாவது 22:2 என்ற விகிதத்தில் கொரோனா பாதித்த நோயாளிகள் குணம் அடைந்து வருகிறார்கள்.

அரசு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை (Movement Control Order) விதித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

ALSO READ  மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கணவனைக் காண நடந்தே சென்ற வயதான பெண்மணி... 

அதோடு, Malaysian Institute of Economic Research (MIER) கணித்ததை விட கொரோனா நோய் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர், 102பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர், 66 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன்  இருப்பதாக கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல்; இந்தியர்கள் நியூசிலாந்திற்குள் நுழைய தடை ! 

News Editor

நைஜீரியாவில் பயங்கரவாதம்……பள்ளிகள் மூடும் நிலை…….

Shobika

‘எனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்’ -போப் ஆண்டவர் பிரான்சிஸ் :

Shobika