இந்தியா சினிமா

மஹாராஷ்ட்ரா கிராம மக்களுக்கு உதவி வரும் நடிகர் சல்மான் கான்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் அரசுக்கு பல்வேறு பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் சல்மான்கான் தன்னுடைய பான்வல் பண்ணை (Panvel Farm House) தோட்டத்தில் தங்கியுள்ளார். இந்தப் பண்ணை தோட்டத்தின் அருகில் உள்ள கிராமங்களை சுற்றி உள்ள 1000 குடும்பங்களுக்கு  தேவையான அரிசி, காய்கறிகள், முட்டை மற்ற உணவு தானியங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

ALSO READ  பிஜேபி அறிவிப்பிற்கு ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு..

சல்மான் கான் அருகில் உள்ள கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். வாகனங்கள் கிடைக்காததால் மனித சங்கிலி போல வரிசையாக நின்று உணவுப் பொருட்களை மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று உதவி உள்ளனர். 

இதனை பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ  அர்னாப் பேசவே விடவில்லை: So I am eating my lunch- நடிகை கஸ்தூரி... 

இதேபோல கல்யாண பகுதியில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு தேவையான உணவு தானியங்களை வழங்கியுள்ளார். அதேபோன்று  மஹாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய ஹாட்ஸ்பாடான மாலேகான் பகுதியில் உள்ள 600 குடும்பங்களுக்கு தேவையான உணவு தானியங்களை வழங்கியுள்ளார். 

சல்மான் கானின் தந்தை சலீம் கான் தனது பங்கிற்கு  ஏராளமான குடும்பங்களுக்கு உதவி வருகிறார். மும்பை அருகே உள்ள மத் தீவில் (Madh Idlands) உள்ள மக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்கியுள்ளார் சல்மான் கான்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நாளில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; 

News Editor

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

naveen santhakumar

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் விமானங்கள் பறக்க தடை

Admin