சினிமா

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நடிகர் நெடுமுடி வேணு (73) காலமானார்.

Actor Nedumudi Venu hospitalised, condition reported to be critical -  KERALA - GENERAL | Kerala Kaumudi Online

அண்மையில் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்த இவர் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ ஆபிசராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இவர் தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப்போறோம், சிலம்பாட்டம், சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவின் உள்ள நெடுமுடியில் பிறந்த இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். 1972ம் ஆண்டில் வெளியான ஒரு சுந்தரியுடே கதா படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார்.

ALSO READ  தமிழ் சினிமாவில் கலக்கிய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்.. யார், என்ன படங்கள்.?

சினிமாவுக்கு முன்பு பல்வேறு நாடகங்களில் நடித்து வந்துள்ளார். 1980-களில் இருந்து மலையாள சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் மலையாளம், தமிழ் மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Nedumudi Venu hospitalised in Thiruvananthapuram, condition critical,  according to medical reports

மேலும், ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும் தல ஒரு படம் நடித்துள்ளார். மூன்று முறை தேசிய விருதுகாலையும், 6 மாநில விருதுகளையும், ஏராளமான பிலிப் பேர் விருதுகளை வென்றுள்ளார். இவரது மறைவுக்கு மலையாளம், தமிழ் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  மலையாள சங்கத்திலிருந்து விலகிய நடிகை பார்வதி:
Tercepat Nedumudi Venu Son

நெடுமுடி வேணுவுக்கு டிஆர் சுசீலா என்ற மனைவியும், உன்னி மற்றும் கண்ணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரிலீஸில் தள்ளிப்போன சிவகார்த்திகேயன் படம்; அதிருப்தியில் ரசிகர்கள்..!

News Editor

எனது நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது; காஜல் அகர்வால் !

News Editor

விஜய்சேதுபதி பட நடிகர் காலமானார் !

News Editor