இந்தியா

மதுபானக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆசிரியர்கள் நியமனம்- குவியும் கண்டனங்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விசாகப்பட்டினம்:-

மதுபானக் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சரிசெய்ய ஆந்திர அரசு ஆசிரியர்களை அமர்த்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சில இடங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஆந்திராவில் சில இடங்களில் மது விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. 

லாக்டவுனின் இருந்த குடிமகன்கள், இந்த தளர்வு அறிவித்த உடன் டாஸ்மாக் வாசலில் கும்பலாக குவிந்தனர். இவர்கள் யாரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இதனை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

இதை தொடர்ந்து ஆந்திரா அரசு விசாகப்பட்டினத்தில் உள்ள மதுபானக் கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களாக அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது. 

ALSO READ  பானி பூரி கடையை நொறுக்கிய வாடிக்கையாளர்கள்….பானிபூரி நீரில் கழிப்பறை நீர் கலப்பு...

காவல்துறையினரும் தன்னார்வலர்களும் சேர்ந்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், ஆசிரியர்கள் மாநில அரசால் அமர்த்தப்பட்டனர். மதுபானம் வாங்க வரிசையில் நின்றவர்களுக்கு ஆசிரியர்கள் டோக்கன்கள் விநியோகிக்கும் வேலையை மேற்கொண்டனர் என்றும் மேலும் கூட்டத்தை சீர் செய்ய உதவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதுகுறித்து கூறிய ஆசியர்கள்:-

அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று விவரங்களைக் கேட்டறிய மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து (DEO) வாய் வழி உத்தரவுகளைப் பெற்றோம், அங்கிருந்து கூட்டத்தை நிர்வாகிக்க அவர்களுக்கு ஒரு மதுக் கடை ஒதுக்கப்பட்டதாக கூறினார்கள். 

மேலும் மதுக் கடைகளில் கூட்டத்தை நிர்வாகிக்க பணிக்கப்பட்ட போது குற்ற உணர்ச்சி ஏற்பட்டது, இந்த தொழிலை மேற்கொள்வதற்காக தாங்கள் பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

ALSO READ  "விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி" - எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா …!

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையைத் தெலுங்கு தேசம் கட்சியும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் விமர்சித்துள்ளன. மேலும் ஆந்திர அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

மேலும் முதல் நாளில் மது விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டது மறுநாளில் மேலும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டு 75 சதவீதம்  உயர்த்தி உள்ளது ஆந்திர அரசு.

ஆந்திராவில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் 3 மணி நேரம் மட்டுமே திறந்து இருப்பதாகவும் மதுபான கடைகள் மட்டும் ஏழு மணி நேரம் திறந்து இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanda onlayn kazino Pin Up Pin Up slot maşınlar

Shobika

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

2024-ல் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சியைப் பிடிப்போம்..

News Editor