தமிழகம்

திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் சுணக்கம்- காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் இரண்டாயிரத்தையும் தாண்டியுள்ளது.

கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக திருமழிசை பகுதியில் காய்கறி மார்கெட் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ALSO READ  இனி ரூ.500 அபராதம்… சுகாதாரத்துறை எச்சரிக்கை!

திருமழிசையில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் கடைகள் வரும் என தெரிகிறது.  முதற்கட்டமாக இங்கு 100 கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

ஆனால் திருமழிசை பகுதியில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் நிறைவடைய மேலும் சில நாட்கள் ஆகும் என்பதால், சென்னை மக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ALSO READ  10 ரூபாய் கட்டணத்தில் சென்னையை சுற்றி பார்க்க சுற்றுலாத் துறை அறிவிப்பு

இந்த காய்கறி சந்தை 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டதால், வியாபாரிகள் இன்று அதிகாலையே வந்துவிட்டனர். ஆனால் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாததால் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புள்ளி விவரங்களை சரியாக பார்க்கவும்; மு.க ஸ்டாலின் மீது அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம் !

News Editor

தமிழகத்தில் தேர்தல் எப்போது : தேர்தல் அதிகாரி பேட்டி..!

News Editor

சேலம் ஆட்சியரின் மனிதாபிமான நடவடிக்கையால் கொரோனா தொற்று உள்ள பெண்ணுக்கு திருமணம்.. 

naveen santhakumar