ஜோதிடம்

எனது மகனை எனது மனைவியோடு சேர்ப்பித்தால் 10 லட்சம் பரிசு- தொழிலதிபர் அறிவிப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


துபாயில் தொழிலதிபராக இருக்கும் இந்தியர் ஒருவர், திருச்சியில் இருக்கும் தனது மகனை தன் மனைவியிடம் சேர்த்தால் 10 லட்சம் ருபாய் பரிசளிப்பதாக அறிவித்த செய்தி இணையங்களில் வைரலாகி வருகிறது.

கொச்சி:-

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற இந்தியர் துபாயில் ரசயான தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு  சுனிதா என்ற மனைவியும் ஆனந்தா மற்றும் விஷ்ணு என்ற இரு மகன்களும் உள்ளனர். 

இந்நிலையில் திருச்சியில் CA படிக்கும் இவரது மூத்த மகன் கொரோனா ஊரடங்கால் அங்கேயே சிக்கியுள்ளார். இவரது மனைவியும் இளைய மகனும் மங்களூருவில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் தனது மகன் ஆனந்தாவை (21) குடும்பத்தோடு சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தனது மகனை ஹெலிகாப்டர் மூலம் கர்நாடகா அழைத்துச் செல்ல ஸ்ரீ குமார் முயன்றுள்ளார். ஆனால் இந்திய அரசாங்கம் கார்போ பணிகள் தவிர்த்து மற்ற எதற்கும் ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளதால் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

ALSO READ  இந்தியாவில் உச்சத்தை எட்டிய கொரோனா... இன்னும் இரண்டு வாரங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 10,000த்தை தாண்டும்??...

இதனால் மனம் உடைந்த ஸ்ரீ குமார் நூதன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது திருச்சிராபள்ளியில் இருக்கும் தனது மகனையும், மங்களூருவில் இருக்கும் எனது மனைவியையும் குழந்தைகளையும் கோட்டயத்தில் உள்ள எனது மனைவியின் வீட்டில் 12/5/20 முன்னரோ அல்லது அன்றோ யார் சேர்க்கின்றார்களோ அவர்களுக்கு 10 லட்சம் தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ALSO READ  2020 ஆம் ஆண்டு கடக ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=3113518148679607&id=100000643562859

இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த 5-ம் தேதியே பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை அறிந்த பல தன்னார்வலர்களும், பல  அரசியல் வாதிகளும், பத்திரிக்கையாளர்களும் இலவசமாகவே உதவிகளை செய்ய முன்வந்துள்ளது பாராட்டத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் தொழிலதிபரான ஸ்ரீ குமாரின் மகன் ஆனந்தாவிற்கு தற்போது இ-பாஸ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இதுல இவ்ளோ சாஸ்திரம் இருக்கா????

naveen santhakumar

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதன் எதிரொலியாக மரம், செடி கொடிகள் கருகிய சோகம்…

naveen santhakumar

திரு அத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசி இராபத்து முதல் நாள் நம்பெருமாள் ரத்னாங்கி சேவை

Admin