இந்தியா

முகக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர், போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரகாசம்:-

ஆந்திராவில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், போலீசாரால் தாக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரகாசம் மாவட்டத்தில் சீராளா அருகே தோமஸ்பேட் பகுதியை சேர்ந்தவர் யாரிசார்லா கிரண்குமார் (Yaricharla Kirankumar). கடந்த 18ஆம் தேதி கிரண்குமார் தனது நண்பர் ஷைனி ஆப்ரஹாம் என்பவருபன் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.

சீராளா அருகே கொட்டபேட்டாவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் கிரண்குமாரை மது அருந்தி உள்ளாரா என்று சோதனை செய்வதற்காக நிறுத்தியுள்ளது. அப்போது முகக்கவசம் அணியாதது குறித்து கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது இதையடுத்து துணை ஆய்வாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து கிரன் குமார் மற்றும் அவரது நண்பர் சைனி ஆபிரகாமை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றார் அப்பொழுது கிரண்குமார் போலீஸ் ஜீப்பில் இருந்து கீழே குதித்த போது தலையில் பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து கிரண்குமாரை சீராளாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். பின் அங்கிருந்து ஓங்கோல் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கே கிரண்குமார் மரணமடைந்தார்.

ALSO READ  விசாகப்பட்டினத்தில் ரசாயன வாயு கசிவு- 8 பேர் பலி 5000 பேர் பாதிப்பு....

கிரண்குமார் போலீசார் தாக்கியதில் தான் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சித்தார்த் கவுசல் கூறுகையில்:-

கிரண்குமார் மற்றும் அவரது நண்பர் இருவரும் மது அருந்தி இருந்தார்கள். கிரண்குமார் இரத்தத்தில் மது அளவு 112 மிலி இருந்தது என்று மருத்துவ அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. கிரண்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார் என்று கூறினார்.

இதனிடையே போலீசாரை கண்டித்து போராட்டம் வெடித்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உயிரிழந்த  கிரண்குமார் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறது. தாக்குதல் தொடர்பாக சீராளா காவல் நிலைய எஸ்ஐ விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இந்திய அறிவியல் சட்டம் (CPC) 176 போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த கிரன் குமாரின் தந்தை மோகன்ராவ் போலீஸ் மீது IPC 324 கீழ் வழக்கு தொடுத்துள்ளார்.

ALSO READ  விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதன் எதிரொலியாக மரம், செடி கொடிகள் கருகிய சோகம்...

ஆனால் அதே சமயம் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ராமி ரெட்டி அளித்த புகாரின்படி கிரண்குமார் மற்றும் அவரது நண்பர் ஆபிரகாம் மீது IPC 353,188,269 and r/w 34 IPC, மோட்டார் வாகனச் சட்டம் Sec 185 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் (Disaster Management Act)  Sec 51 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: இஸ்லாமிய வழக்கறிஞருக்கு முதல் அழைப்பிதழ்… 

naveen santhakumar

எரிந்துகொண்டிருந்த கேஸ் சிலிண்டரை புத்திசாலித்தனமாக செயல்பட்டு அணைத்த போலீஸ் கான்ஸ்டபிள்… 

naveen santhakumar

10,000 படுக்கைகள்; சீனாவை விட பத்து மடங்கு பெரிய மருத்துவ வளாகத்தை அமைத்த இந்தியா… 

naveen santhakumar