உலகம்

தண்டனையில் இருந்து தப்பிக்க போலி இறப்பு சான்றிதழ்: எழுத்து பிழையால் சிக்கிய பரிதாப குற்றவாளி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

அமெரிக்காவில் போலி மரண சான்றிதழ் மூலம் தண்டனையில் இருந்து தப்ப நினைத்த குற்றவாளி எழுத்துப்பிழையினால் சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

லாங் தீவைச் சேர்ந்த ஒரு குற்றவாளி  சிறை தண்டனையை தவிர்க்க, நீதிமன்றத்திற்கு  போலியானஇறப்பு சான்றிதழை அவருடன் வழக்கறிஞர் அனுப்பியுள்ளார். ஆனால்  சமர்ப்பிக்கப்பட்ட இறப்புச் சான்றிதழில் எழுத்துப் பிழை இருந்ததால் அவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

நியூயார்க் அருகே ஹன்டிங்டன் (Huntington) பகுதியைச் சேர்ந்த ராபர்ட் பெர்கர் (25) (Robert Berger) கடந்த அக்டோபர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கினார் இதில் இருந்து தப்புவதற்காக நகரை விட்டு தப்பிய இவர் இந்த வழக்கிலிருந்து முற்றிலும் தப்புவதற்காக தனக்குத்தானே போலியான பிறப்பு சான்றிதழ் ஒன்றை உருவாக்கினார். அந்த இறப்பு சான்றிதழ் பார்ப்பதற்கு தத்துரூபமாக உண்மையான இறப்புச் சான்றிதழ் போன்று தோற்றமளித்தது. நியூஜெர்சி மாகாண சுகாதாரத் துறை இந்த சான்றிதழை வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது எல்லாவற்றையும் நன்றாக தான் செய்திருந்தார் ராபர்ட் ஆனால் மண்டை மேலிருந்த கொண்டையை மறைப்பததை போன்று எழுத்துப் பிழையால் கடைசியில் மாட்டிக்கொண்டார்.

அந்த எழுத்துக்களை என்னவென்றால் Registry அதற்கு பதிலாக Regsitry என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனையடுத்து  ராபர்ட் பெர்கர், தண்டனையைத் தவிர்ப்பதற்காக போலி மரண சான்றிதழ் தயாரித்த குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், கூடுதலாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று பென்சில்வேனியா நீதிமன்றம் உத்தரவிட்டது.

ALSO READ  அடுக்குமாடி குடியிருப்பில் பரவிய தீ… 19 பேர் உடல் கருகி பலி!

பிலடெல்பியாவின் புறநகர்ப் பகுதியில் பதுங்கி இருந்த ராபர்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டான். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது- பாக். அரசு அறிவிப்பு…!

naveen santhakumar

வடகொரியா, ஃபைசர் நிறுவனத்தின் தொழிநுட்பத்தை திருட முயற்சி..!

News Editor

இந்தியர்களின் மீம்ஸை ரசித்த இவாங்கா ட்ரம்ப்…

Admin