உலகம்

அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது- பாக். அரசு அறிவிப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத்:-

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என சிந்து மாகாண அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 22 கோடி, இதில் 2 கோடியே 20 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினமும் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசியால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. எனவே மக்களில் பலர் ஊசி போட முன்வரவில்லை. 

இதில் பாமர மக்கள் மட்டுமின்றி, படித்தவர்களும், அரசு பணிகளில் இருப்பவர்களும் கூட ஊசி போட தயங்குகிறார்கள்.

ALSO READ  இந்தியா- பாகிஸ்தான் எல்லை - குண்டு வெடிப்பு?

இதனிடையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய டெல்டா வகை வைரஸ்கள் பாகிஸ்தானிலும் பரவத் தொடங்கி உள்ளது. சிந்து மாகாணத்தில் அதிகமாக இவ்வைரஸ் தொற்று காணப்படுகிறது.

இந்த வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது.

ALSO READ  பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு..

முதல்-மந்திரி முராத் அலிஷா

இதனைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் அலிஷா அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக நிதித்துறைக்கு அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு..

naveen santhakumar

VAT வரியை மூன்று மடங்கு உயர்த்தும் சவூதி அரேபியா…

naveen santhakumar

ஒரே பாதையில் வந்த ரயில்… பீதியடைந்த பயணிகள்

Admin