விளையாட்டு

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி ஸ்டிராஸ் ஹெட் சதத்தால் வலுவான நிலையில் உள்ளது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுநாள் தொடங்கிய இப்போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என அழைக்கப்படுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் களமிறங்கினார்.

இதனைத் தொடர்ந்தே தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. போல்ட் பந்துவீச்சில் ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன்பின் வார்னர் உடன் களமிறங்கிய லபுசாக்னே அதிரடியில் இறங்கினார். வார்னர் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, லபுசாக்னே தனது ஏழாவது அரை சதத்தை கடந்து 63 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் களமிறங்கிய மேத்யூ வேட் 38 ரன்களில் ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 30 டன்கள் தானும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் கிராண்ட்ஹோம் இரண்டு விக்கெட்டுகளையும், வாக்னர், போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் 85 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ALSO READ  தமிழக வீரரை ஆட்டத்தில் சேர்க்காதது குறித்து தோனி விளக்கம்:

தேனீர் இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 433 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய அந்தத் அணியின் வீரர் டிராஸ் ஹெட் சதமடித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!!

naveen santhakumar

பேட் கம்மின்ஸ், பிரட்லீயை தொடர்ந்து இந்தியாவிற்கு நிதியுதவி அளித்த சச்சின் !

News Editor

ரபாடா டெஸ்ட் போட்டியில் விளையாட தடை

Admin