இந்தியா

இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது…… சக்திகாந்த தாஸ்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் தற்போது படிப்படியாக மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார்.

ஃஎப்ஐசிசிஐ நிர்வாக குழு கூட்டத்தில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சக்திகாந்ததாஸ் பேசினார்.அதில் “பொருளாதாரம் முழுமையாக மீளவில்லை, நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு தான், முதல் காலாண்டில், கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தியது. சில துறைகளில், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காணப்பட்ட பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  "இந்தக் குடும்பம் ஒரு ஜோடி எருதுக்கு தகுதியானவர்கள் கிடையாது. அவர்கள் டிராக்டருக்கு தகுதியானவர்கள்"- டிராக்டர் வழங்கிய ரியல் ஹீரோ சோனு சூட்... 

தற்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையிலும், பொருளாதாரம் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக உயரும். சில துறைகளில் காணப்பட்ட முரண்பாடுகள், எளிமைபடுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது”.

மேலும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள்,  இந்திய பங்கு சந்தைகளில் அதிக முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார். இதனால், இந்தியப் பங்கு சந்தை வெகுவாக உயர்வதாக குறிபிட்ட அவர், தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது என்றார். அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான கடன் உதவிகள் தாரளமாக கிடைப்பதாக அவர் கூறினார்.என்று  அவர் பேசினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயற்கை விவசாயி வெற்றி பெற்ற கதை…

Admin

Pubg விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி

Admin

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி; 1,000 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பாலகோபால்…!

naveen santhakumar