உலகம்

ஹெலிகாப்டரை வெட்டி எடுக்கப்பட்ட இதயம்….இரண்டு முறை கீழே விழுந்தும் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா:

அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க, அவருக்கு பொருத்தப்பட இருந்த இதயம், இரண்டு முறை கீழே விழுந்துள்ளது. 

அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்துளார், அவருக்கு இதயம் பொருத்தப்பட மருத்துவமனை ஒன்றிற்கு இதயம் ஒன்றை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த இதயம் இரண்டுமுறை கீழே விழுந்துள்ளது.

ALSO READ  உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றய அதிர்ச்சி சம்பவம்..!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் தரையிறங்கும் போதே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

இதனையடுத்து மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரை வெட்டி, இதயத்தை பத்திரமாக எடுத்து அங்கிருந்த மருத்துவ ஊழியர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் வேகமாக அந்த இதயத்தை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ALSO READ  தனித்தீவில் குவியல் குவியலாக சடலங்கள் அடக்கம் செய்யப்படும் வீடியோ.....

அப்போது அவர் தடுக்கி கீழே விழுந்தார், அந்த இதயமும் கீழே விழுந்தது. ஆனால், அதற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அது நல்லபடியாக உரிய நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக பின்னர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிலிப்பைன்ஸை வாட்டி எடுத்த “வாம்கோ”:

naveen santhakumar

பசியால் வாடும் மக்களை ஆமைக்கறி சாப்பிட சொன்ன வடகொரிய அதிபர்! 

naveen santhakumar

சீன உளவு கப்பலின் தாக்கத்தை உன்னிப்பாக கண்காணிப்போம்..

Shanthi