உலகம்

உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றய அதிர்ச்சி சம்பவம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் அய்மான்  ஜவாஹிரி  மீண்டும் வீடியோவில் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

ஒசாமா பின்லேடனின் இறப்பிற்குப் பிறகு அல்-கொய்தா இயக்கத்தின் தலைவராக அய்மான் ஜவாஹிரி இருந்தார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இதனை உறுதி செய்யவில்லை. அதே வேளையில் அய்மன் அல்-ஜவாஹிரி உயிருடன் இருப்பதற்கான எந்தவித ஆதாரங்களும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் கழிந்த  நிலையில் அல்-கொய்தா தலைவர் அய்மான்  ஜவாஹிரி  மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 61 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுகிறார். ஜிவாஹிரி “ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது” என கூறினார். அல்-கொய்தாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசியவர், கடந்த ஜனவரி மாதம் சிரியாவில் உள்ள ரக்கா நகரில் ரஷிய படைகளை குறிவைத்து அல்-கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பாராட்டினார்.

ALSO READ  'கொரோனா என்பது வெறும் புரளி' கோவிட் பார்ட்டியில் கலந்துகொண்ட இளம் பெண்…. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் 20 வருட போருக்கு பின் தோல்வியுடன் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இந்த வீடியோவில் தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து அல்-ஜவாஹிரி ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடதக்கது. இதற்கு முன்னதாக அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி எழுதிய 852 பக்க புத்தகம் ஒன்றும் டெலிகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க தேர்தல்….முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவுகள்…..

naveen santhakumar

சுற்றுலா பயணியை கடித்து துப்பிய சுறா.. கரை ஒதுங்கிய மனித கால்

News Editor

நள்ளிரவில் கோடிஸ்வரியான பெண்!!!

Admin