தமிழகம்

புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்படுகிறார் தமிழக முதல்வர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. 

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை  வழங்குவதிலும்  மீட்புக் குழுவினர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. 

ALSO READ  பேருந்துகள் இயக்கப்படாது- பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ..!

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் கடலூர் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு…

naveen santhakumar

பொங்கல் பரிசு ரூ 2500…! அரசனை வெளியிட்டது தமிழக அரசு…!

News Editor

மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor