உலகம்

சீனா-பாகிஸ்தான் இடையே புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத் :

சீனாவின் பாதுகாப்பு அமைச்சரும் ராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே,பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை பார்வையிட்ட ஜெனரல் வே, பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை சந்தித்து பேசினார்.

அப்போது இருவரும் புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இது குறித்து சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சீனா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவங்களுக்கு இடையேயிலான உறவுகள் தொழில் நுட்பம், உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு, பிற பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ALSO READ  அமெரிக்கா-தலிபான்கள் இடையே கையெழுத்தாகிறது அமைதி ஒப்பந்தம்- இந்தியா பங்கேற்ப்பு..!!!!

பாகிஸ்தானின் ராணுவ திறனை கட்டமைக்கும் வகையில் இந்த சுற்றுப் பயணம் அமைநுதுள்ளது.சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோரை சந்தித்து பேசினார்.சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் சீனா-பாகிஸ்தான் இடையேயான இந்த புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

45 ஆண்டு கழித்து கடலில் தரையிறங்கும் ராக்கெட்!…

naveen santhakumar

120 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவி

News Editor

“சிங்கிள்” தான் கெத்து – தென்கொரிய பெண்களின் அதிரடி முடிவு

Admin